அஜித்துக்கு அண்ணனா இருப்பாரோ.? துணிவு படத்தின் வெற்றியை மிக எளிமையாக கொண்டாடிய ஹெச் வினோத்…

H.vinoth
H.vinoth

சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாணவர் இயக்குனர் ஹெச் வினோத் அதன் பிறகு தீரன் அதிகாரம் ஒன்று என்று மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தார். ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட தீரன் அதிகாரம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு நடிகர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்துள்ளார் நடிகர் அஜித். ஆனால் இந்த படம் ரசிகர்கள் எதிர்பார்த்ததை பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அதன் பிறகு வலிமை திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் என்று அஜித் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இறந்தார்கள். ஆனால் இந்த படமும் வெளியாகி மிகவும் கடுமையான விமர்சனத்தை பெற்ற தோல்வியை சந்தித்தது.

அப்படியே நடிகர் அஜித்தை வைத்து இரண்டு தொடர் தோல்வியை கொடுத்த எச் வினோத் மூன்றாவது முறையாவது கொடுப்பார் என்று ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து இருந்தார்கள். ரசிகர்களின் எதிர்பார்ப்பு வீணாகாதவாறு ஜனவரி 11ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி நடை போட்டு வருகிறது.

முதல் நாளில் 24 கோடி வசூலை அள்ளிய துணிவு திரைப்படம் இரண்டாவது நாளும் 22 கோடி வரை வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. துணிவு படத்தின் வெற்றி ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில் துணிவு படத்தின் இயக்குனர் எச் வினோத் அவர்கள் துணிவு படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக  விவசாயிகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று எளிமையான முறையில் கரும்பு கட்டு வாங்கி  துணிவு படத்தின் வெற்றியை கொண்டாடி வருகிறார்.

இதை இயக்குனர் சரவணன் தனது முக புத்தகத்தில் பதிவு செய்துள்ளார் அது மட்டுமல்லாமல் ஒரு மாபெரும் வெற்றியை எளிமையாக கொண்டாடுவது தானே பொருத்தமாக இருக்கும் என்று அந்த முக புத்தகத்தில் எச் வினோத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

h.vinoth
h.vinoth