நடிகர் விஜயகாந்த் இத்தனை கோடிக்கு சொந்தக்காரர..? அட இது தெரியாமல் போச்சே..!

தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் ரஜினி கமல் என பல பிரபல முன்னணி நடிகர்களுக்கு டப் கொடுத்த நடிகர் தான் விஜயகாந்த் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிவிட்டார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான ரமணா மற்றும் சத்ரியன் ஊமை விழிகள் போன்ற பல்வேறு திரைப்படங்களும் இன்றும் ரசிகர்களின் மனதில் மறவாத அமைந்தது மட்டும் இல்லாமல் சரித்திரத்தில் இடம் பெற்ற படமாக அமைந்துவிட்டது.

பொதுவாக நடிகர் விஜயகாந்த் சினிமாவில் கதாநாயகனாக நடிப்பது மட்டும் இல்லாமல் தற்போது பொது சேவை செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் அரசியலிலும் ஈடுபட்டுள்ளார் அந்த வகையில் பிரபல கட்சி ஒன்றை உருவாக்கி அதில் தலைவராக இருந்து வருகிறார்.

மேலும் விஜயகாந்த் அவர்கள் சமீபத்தில் உடல்நலக்குறைவின் காரணமாக சினிமாவுக்கு முழுக்கு போட்டது மட்டும் இல்லாமல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இந்நிலையில் வெகு காலமாக சினிமாவில் பிரேக் விட்ட நடிகர் விஜயகாந்த் சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படத்தில் மீண்டும் சினிமாவில் களம் இறங்க உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இந்த விஷயம் எவ்வளவு உண்மை என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் இந்நிலையில் கேப்டன் விஜயகாந்தின் முழு சொத்து மதிப்பு பற்றிய விவரம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

vijaykanth-1
vijaykanth-1

அந்த வகையில் விஜயகாந்தின் முழு சொத்து மதிப்பு 45 முதல் 50 கோடி வரை இருக்கும் என தெரியவந்துள்ளது ஆனால் இந்த தகவலானது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

https://www.youtube.com/watch?v=nhmuO4L8O8Q

Leave a Comment