யோகிபாபுவை தொடர்ந்து பிரபல காமெடி நடிகர் வடிவேலுடன் கைகோர்க்கும் டாக்டர் பட நடிகர் – யார் அது தெரியுமா.?

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவரது காமெடி மக்கள் மட்டும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து இழுத்தது. இப்படி பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்த இவர் பிறகு இருபத்தி மூன்றாம் புலிகேசி எலி போன்ற ஒரு படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார்.

தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு சுராஜ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நாய் சேகர் என்ற பெயரில் வடிவேலு மிகவும் ஃபேமஸ் ஆகியிருந்தார்.அதனால் அந்தப் அந்தப் பெயரை தற்போது நடிக்கும் படத்திற்கு தலைப்பாக வைக்க ஆசைப்பட்டு இருந்தார்.

இருந்தும் படத்தின் தலைப்புக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்தன. படம் ஆரம்பத்திலேயே நாய் சேகர் என்ற பெயரை வைத்துள்ளனர். ஆனால் சதீஷ் நடிக்கும் வேறொரு படத்திற்கு இந்த தலைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால்  படத்தின் தலைப்பை சிறு மாற்றத்துடன் நாய் சேகர் ரிட்டன் என்ற தலைப்பை படத்திற்கு வைத்துள்ளனர்.

இயக்குனர் சுராஜ் காமெடி படத்தை இயக்குவதில் வல்லவர் வடிவேலும் காமெடியில் பின்னி பெடல் எடுத்து இருப்பார் இவர்கள் இருவரும் இப்படத்தில் இணைவதால் இப்படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என தெரியவருகிறது. டாக்டர் படத்தில் யோகிபாபுவுடன் இணைந்து நடித்த மற்றொரு புதுமுக காமெடி நடிகரான ரெடின் கிங்ஸ் நடித்து அசத்தியிருப்பார்.

தற்போது இவர் நாய் சேகர் ரிட்டன் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இவர்கள் இருவரும் இணைவதால் கண்டிப்பாக இப்படம் பெரிய அளவில் இருக்கும் என ரசிகர்கள்  எதிர்பார்க்கப்படுகிறது.

redin kingsley
redin kingsley

Leave a Comment