பெற்றோர்களின் கவனக்குறைவு..! விஜய் ஆண்டனி மகள் இறப்பு குறித்து பேசிய பிரபல மருத்துவர்

Vijay Antony Daughter : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் விஜய் ஆண்டனி இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிச்சைக்காரன், கொலை போன்ற படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து ரத்தம் மற்றும் ஒரு சில படங்களில் கமிட்டாகி ஓடிக் கொண்டிருக்கிறார் இவரைப் போலவே அவரது மனைவியை பாத்திமா ஆண்டனியும் சினிமாவில் படங்களை தயாரித்து வருகிறார்.

சினிமாவில் அதிக நேரம் செலவிடும் இவர்கள் தனது குழந்தைகளையும் நல்லபடியாக தான் வளர்த்து வந்தார்கள். திடீரென நேற்று விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா அதிகாலை 3 மணிக்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இதனை அடுத்து அங்கு தடவியல் நிபுணர்கள் சோதனை நடத்தினர் மேலும் உடல் பரிசோதிக்கப்பட்டது அனைத்தையும் வைத்து பார்க்கையில் அவர் தற்கொலை தான் செய்து கொண்டார்.

என தகவல்கள் வெளிவந்தது இவருடைய இறப்புக்கு  சினிமா பிரபலங்கள், உறவினர், ரசிகர்கள் என அனைவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இவர் மன அழுத்தத்தால் தான் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் பரவுகின்றன இந்த நிலையில் பிரபல மருத்துவர் ஒருவர் விஜய் ஆண்டனியின் மகள் மரணம் குறித்து பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்..

பெற்றோர்கள் என்பவர்கள் குழந்தைகளின் பாதுகாவலர் என்ற முறையில் அவர்களை கண்காணிப்பதும் அவர்களுடைய தலையாய கடமையாக இருக்கிறது. ஏற்கனவே மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று கூறப்படும் பெண்ணை தனியாக அறையில் தங்க வைப்பது  தவறு அவர் உடனே ஒரு விபரீத முடிவுக்கு சென்று இருக்க மாட்டார் அங்கம், இங்கும் நடந்திருப்பார்.

சோகத்தில் இருந்திருப்பார். அழுதிருப்பார், புலம்பி இருப்பார் அப்படியான நேரங்களில் விஜய் ஆண்டனியின் குடும்பத்தினர் அவருடன் இருந்திருக்க வேண்டும். அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்ன விஷயம் என்று அவரிடம் மனம் விட்டு பேசி இருக்க வேண்டும் அவருடைய பிரச்சனைகளை கண்டறிந்து அதனை சரி செய்ய முயற்சி செய்திருக்க வேண்டும்.

அவரை வெளியே அழைத்து சென்று இருக்க வேண்டும் அதனை செய்ய தவறியது விஜய் ஆண்டனி தன்னுடைய  மகளை தனியாக இருந்திருக்க விட்டது தான் மிகப் பெரிய பிரச்சனை என அந்த மருத்துவர் கூறி உள்ளார். மேலும் சமீபகாலமாக வீடுகளில் குழந்தைகள் தனி வீடு, தனி தொலைக்காட்சி, தனிக் கணினி, தனி செல்போன் என கொடுத்து விடுகிறார்கள் வசதி இருக்கிறது.

என்பதால் இப்படி செய்வது குழந்தைகளை தனித்து விட்டு விடுகிறார்கள் அதனால் சமூகத்துடன் மட்டுமல்லாமல் தன்னுடைய குடும்பத்தார் உடனும் ஒட்டாமல் போய்விடுகிறார்கள் அம்மா, அப்பா, பாட்டி என்கின்ற உயிருக்கு உயிரான பாசம், பந்தம், சொந்தம் என்ற விஷயங்கள் எல்லாம் அவர்களுக்கு தெரியாமலேயே போய் விடுகிறது.

Meera Antony
Meera Antony

குழந்தைகள் தனிமைப்படுத்துவதும் எந்த விஷயத்தையும் பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது. குழந்தைகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணிக்க வேண்டும் அவசியம்.  எந்தப் பிரச்சினை வந்தாலும் அம்மா, அப்பாவிடம் கூறினால் சரியாக விடும் என்ற நம்பிக்கை பெற்றோர்கள் கொடுக்க வேண்டும் அதை விட்டுவிட்டு அம்மா, அப்பாவுக்கு தெரிந்தால் அவ்வளவு தான் என்று பயம் குழந்தைகளுக்கு வரவே கூடாது என கூறியுள்ளார்.