டாக்டர், பாடகியை தொடர்ந்து நடிகையாகும் சூப்பர் சிங்கர் பிரபலம்.!

தற்பொழுதுள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலும் மக்கள் மத்தியிலும் ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து ரசிகர்கள் விரும்பும் வகையில் ஏராளமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி தான் விஜய் டிவி.

பெரும்பாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் டிஆர்பி-யில் முன்னணி வகுப்பு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இதனைத் தொடர்ந்து பல வருடங்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறார்கள்.இவ்வாறு இந்நிகழ்ச்சியின் மூலம் பாடி பிரபலமடைந்த பலரும் பல படங்களில் பாடி பிரபலமாகி விடுகிறார்கள்.

அந்த வரிசையில் சூப்பர் சிங்கர் 2 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் பிரியங்கா என்கே. இவர் பாடிய அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மேலும் சின்ன குயில் பாடல் அவரின் குரலில் மிகவும் அருமையாக இருந்தால் மிகப்பெரிய ரீச்சை பெற்றது. இந்தப் பாடலை பாடி கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாகவும் நிகழ்ச்சி ஒன்றில் பிரியங்கா கூறியிருந்தார்.

pisasu
pisasu

இவர் பாடகியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தாலும் இவர் ஒரு பல் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது இவ்வாறு பாடகி, மருத்துவர் இதனை தொடர்ந்து தற்பொழுது நடிகையாக அறிமுகமாக உள்ளார் என்ற தகவல் தர்பூசம் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது பிசாசு 2 படத்தின் ப்ரமோஷனுக்காக எடுத்துக் கொண்ட வீடியோவை பிரியங்கா பாடியும் நடித்தும் இருக்கிறார். விரைவில் அந்த வீடியோ வெளியாக்க இருப்பதாகவும் பாடகி, மருத்துவர் என்று இருந்த பிரியங்கா மக்கள் மனதை கவர்ந்தது தற்போது நடிகையாக அறிமுகமாக இருப்பதால் அனைவரும் இவருக்கு தன்னுடைய பாராட்டை கூறி வருகிறார்கள்.

Leave a Comment