பாக்ஸ் ஆபிஸ்ஸில் இடம் பிடிக்கும் “டாக்டர்” படம் – வசூல் வேட்டை நிலவரம் இதோ.

sivakarthikeyan
sivakarthikeyan

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாக நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளார். முதல் முறையாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் டாக்டர் இந்த திரைப்படம் கடந்த 9ம் தேதி திரையரங்கில் வெளியாகி கூட்டத்தை அலையலையாக இழுத்து வருகிறது.

படத்தில் சின்னதாக ஒரு மெசேஜை சொன்னாலும் அழுத்தமாக பல காமெடிகளை சொல்லி சிரிக்க வைத்து இருப்பதால் மக்கள் தற்போது திரையரங்கை நாடி கொண்டே இருக்கின்றனர். இந்த படத்தில் சிவகார்த்திகேயனும் தாண்டி ஒரு சிலரின் நடிப்பு மிக சிறப்பாக இருந்தது.

அந்தவகையில் அர்ச்சனா, தீபா, யோகிபாபு, கிங்ஸ்லி, அலெக்சாண்டர், வினய் போன்றோரின் நடிப்பு வேற லெவல். மேலும் இந்த திரைப்படம் மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஓரளவு பூர்த்தி செய்து இருப்பதால் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் நாளே இந்த திரைப்படம் சுமார் ஆறு கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது.

இரண்டாவது நாளும் நல்ல வசூல் வேட்டையை நடத்தியது இப்படி தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன மூன்று நாட்கள் முடிவடைந்த நிலையில் இந்த திரைப்படம் அள்ளி உள்ள மொத்த வசூல் 25 கோடிக்கு மேல் என தெரியவந்துள்ளது.  நடிகர் சிவகார்த்திகேயனின் பெரும்பாலான படங்கள் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

திரைப்படம் அந்த படங்களை ஓவர்டேக் செய்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. டாக்டர் திரைப்படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் படம் என்பதோடு மட்டுமல்லாமல் பாக்ஸ் ஆபிஸிலும் வெகுவிரைவிலேயே நல்ல ஒரு இடத்தை பெறும் என பலரும் கூறி வருகின்றனர்.