நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை வைஷ்ணவின் புதிய சீரியலின் பெயர் என்ன தெரியுமா.? எந்த டிவி தெரியுமா.? முழு விவரம் இதோ.

naam-irvar-namakku-iruvar

விஜய் டிவி தொலைக்காட்சியில் டாப் சீரியல்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர் தொடர். இந்தத் தொடரில் சின்னத்திரை பிரபல நாயகன் செந்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார். இவரது மூன்று தங்கைகளில் ஒருவரான ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வைஷ்ணவி.

இந்த சீரியலில் ஒரு நேரத்தில் இவரது கதாபாத்திரம் மிகவும் முக்கியமாக பார்க்கப்பட்டாலும் தற்போது இவருக்கு இந்தத் தொடரில்  பெரிய ரோல் இல்லை. இந்த நிலையில் சின்னத்திரை  நடிகைகள் பலரும் தான் நடித்துக்கொண்டிருக்கும் சீரியலை விட பெரிய வாய்ப்புகள் கிடைத்தால் அதில் இருந்து விலகி விடுகின்றன.

அந்த வகையில் இந்த சீரியலில் நாயகியாக நடித்து வந்த ரக்ஷிதா கன்னட திரைப்படம் ஒன்றில் கமிட் ஆக  உள்ளதால் இந்த சீரியலில் இருந்து சமீபத்தில் விலகியுள்ளார். மேலும் அதற்காக தற்போது இந்த தொலைக்காட்சியில் இதற்கு முன் ஒளிபரப்பாகி ஹிட்டடித்த அரண்மனை கிளி சீரியலில் நடித்து வந்த மோனிஷா இந்த தொடரில்  மகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இது போன்று பல சின்னத்திரை நடிகைகளும் படிப்படியாக உயர்ந்து வெள்ளித்திரைக்கு சென்றுள்ளனர்கள். இந்த நிலையில் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வரும் வைஷ்ணவிக்கு  ஒரு புதிய சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

vaizhanavi
vaizhanavi

இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் பேரன்பு என்ற புதிய சீரியலில் விஜய் என்ற புதிய கதாநாயகன் உடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். மேலும் இந்த தொடரில் செம்பருத்தி சீரியலில் வில்லியாக நடித்து வரும் லக்ஷ்மி மற்றும் சீரியல் ஆக்டர் சிவகுமார் இவர்களுடன் இணைந்து நடிக்க உள்ளார்கள் என்ற தகவலும் தற்போது வெளியாகின.

new serial
new serial