பார்த்திபன் நடித்த அழகி திரைப்படத்தில் குழந்தையாக நடித்த இவரை ஞாபகம் இருக்குதா.? ரசிகர்களே வியக்கும் வகையில் இவர் தற்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா.?

குழந்தை நட்சத்திரமாக நடித்த பல நடிகைகளும் தற்பொழுது சினிமா பக்கமே வரவில்லை அதற்கு முக்கிய காரணம் பலரும் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடுகிறார்கள் அதேபோல் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை தான் ஸ்ருதி இவர் ஆரம்ப காலகட்டத்தில் விளம்பர திரைப்படங்களில் தான் நடித்து வந்தார் அதன்பிறகு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதைத்தொடர்ந்து பார்த்திபன் நடித்த அழகி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு பெயரை தக்க வைத்துக்கொண்டார் அந்தத் திரைப்படத்திற்கு பிறகு விஜயகாந்த் நடிப்பில் வெளியான ரமணா என்ற திரைப்படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.மேலும் 2006-ஆம் ஆண்டு பாண்டியராஜன் மகன் நடித்த கைவந்த கலை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்பு சரியான படவாய்ப்பு இல்லாத காரணத்தினால் சினிமாவில் நடிப்பதை கொஞ்சம் நிறுத்தி வைத்துவிட்டார் அதன் பிறகு பல வருடங்கள் கழித்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார்.அதன் பிறகு என்ன ஆனார் என்பது தெரியவில்லை.

இப்படி இருக்கும் நிலைமையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய சினிமா அனுபவங்களை பற்றி கூறியுள்ளாராம்.அதில் நான் படிக்கும் பொழுதே என்னை விளம்பர படத்தில் நடிக்க கேட்டார்கள் நானும் என் அம்மாவிடம் கேட்டு நடிக்க சென்றபொழுது பயமாக இருந்தது ஆனால் போகப்போக படித்துக் கொண்டே நான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன்.

azhaki
azhaki

பின்பு எனக்கு சரியான பட வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் ஏதாவது ஒரு துறையில் பணியாற்ற வேண்டும் என்று நினைத்தேன் என்று கூறி நான் இப்பொழுது ஜெர்மனி நாட்டில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன் என்று கூறினாராம் மேலும் இவர் அளித்த பதில் ரசிகர்களுக்கு மிகவும் ஷாக் ஆக தான் இருந்தது.

Leave a Comment