பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நாஞ்சில் விஜயன் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்க போவது யாரு, சிரிச்சா போச்சு, போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார்.
அந்த வகையில் தன்னுடைய விடா முயற்சி மற்றும் திறமை மூலமாக விஜய் டிவியின் மிகப் பிரபலமான காமெடியனாக வலம் வந்தது மட்டுமில்லாமல் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் லேடிஸ் கெட்டப் போட்டு தான் நடித்து வந்தார் இதனால் நாஞ்சில் விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் உருவாகியது மட்டுமில்லாமல் இதன் மூலமாக சில திரைப்படங்களிலும் நடித்து இருந்தார்.
இந்நிலையில் நமது நடிகர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வள்ளி திருமணம் என்ற தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் இன்னும் சில தொடர்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் அவர் வத்திக்குச்சி என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார் அந்தவகையில் ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இன்நிலைகள் நமது நடிகர் பல்லாவரத்தில் டிராவல்ஸ் பஸ் புக் செய்திருந்தார் இரண்டு மணி நேரம் காத்திருந்த நிலையிலும் டிராவல்ஸ் இல் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை ஆகையால் உடனே வாடிக்கையாளர் நிலையத்திற்கு சென்ற நாஞ்சில் விஜயன் கஸ்டமரை பார்த்தால் உங்களுக்கு பைத்தியக்காரன் போல தெரிகிறதா. என்று கேட்டவுடன் பஸ் ப்ரேக் டவுன் என்று கூறியுள்ளார்கள். இதனை எங்களிடம் போன் செய்து கூறியிருக்கலாம் அல்லது நாங்கள் போன் பண்ணியப்போதாவது இந்த நிலவரத்தை சொல்லி இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

அதை விட்டுவிட்டு இரண்டு மணி நேரம் நாங்கள் பஸ்ஸ்டாண்டில் காத்துக் கொண்டிருக்கிறோம் நாங்கள் எப்படி வீட்டிற்கு செல்வது நாளைக்கு ஒரு ஆபரேஷன் ரொம்ப எமர்ஜென்சி அதற்காகத்தான் நான் தற்போது கிளம்பினேன் பதில் சொல்லாமல் தெனாவட்டாக இருந்தால் எப்படி என பேசியுள்ளார்.
உங்கள் கருத்தை நான் குறை சொல்லவில்லை தகவலை சரியான முறையில் எங்களுக்கு தெரிவித்து இருந்தால் இந்த பிரச்சனை கிடையாது. ஆகையால் போலீசை வர சொல்லுங்கள் என்று கூறியது மட்டுமில்லாமல் உங்கள் மேனேஜர் ஐயும் வரச்சொல்லுங்கள் என்று நாஞ்சில் விஜயன் பேசியுள்ளார். பின்னர் போலீஸ் அதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்து நாஞ்சில் விஜயன்க்கு அந்த பணத்தை திரும்பி பெற்றுக் கொடுத்துள்ளார்கள் இந்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.