அஜித் தான் உனக்கு பிடிக்குமா.? என்ன பிடிக்காதா.? பிரபல நடிகையிடம் மல்லு கட்டிய தளபதி விஜய்…

நடிகர்களுக்கு இணையாக தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஒரு சில திரைப்படங்களில் நடித்து அதன் பின்பு கதாநாயகியாக உருவம் எடுத்தவர் நடிகை மீனா. இவர் ரஜினி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்து தமிழ் சினிமாவில் தனது முகத்தை பதிய வைத்தார். அதனை தொடர்ந்து பார்த்தால் நடிகர் ரஜினியுடன் சேர்ந்து கதாநாயகியாக நடித்து பல திரைப்படங்களில் இவர் ரஜினியுடன் பணியாற்றினார் அவ்வாறு இவர் ரஜினியுடன் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரஜினி,கமல்,அஜித்,சரத்குமார்,சத்யராஜ்,கார்த்திக் போன்ற பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் மீனா ஆனால் விஜய்யுடன் மட்டும் ஒரு திரைப்படத்தில் கூட நடிக்கவில்லையாம். அது பற்றி தான் தற்பொழுது ஒரு தகவல் இணையத்தில் வெளிவந்துள்ளது.அதாவது விஜயின் திரைப்படங்களில் மீனா நடித்ததே இல்லை ஷாஜகான் படத்தில் சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் பாடலுக்கு மட்டும் வந்து நடனம் ஆடினாராம் ஆனால் ஒரு படத்தில் கூட விஜய் உடன் இணைந்து நடித்ததில்லை.

இதைப் பற்றி விஜய் மீனாவிடம் என்னை விட அஜித் தானே உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று விஜய் மீனாவிடம் கேட்டதாக ஒரு தகவல் தற்பொழுது கசிந்துள்ளது அதாவது மீனாதான் விஜய் திரைப்படத்தில் நடிக்கவில்லை என்றாலும் அவரது மகள் நைனிகாவை விஜய் நடித்த தெறி திரைப்படத்தில் நடித்திருப்பார்.

அப்பொழுது தெறி திரைப்படத்தில் முதல் ஷாட்டிலேயே மீனாவின் மகள் மிகவும் சிறப்பாக நடித்ததால் அதைப் பற்றி மீனாவிடம் விஜய் பேசிக் கொண்டிருந்தாராம் அந்த சமயத்தில் மீனாவிடம் விஜய் உங்களுக்கு என்னை விட அஜித்தை தானே ரொம்ப பிடிக்கும் என்று கேட்டாராம் அதற்கு மீனா ஏன் என்று கேட்க நீங்கள் என்கூட ஒரு படம் கூட நடிக்கவில்லை.

vijay and meena
vijay and meena

ஆனால் அஜித் கூட மூன்று படங்கள் நடித்திருக்கீங்க என்றாராம் விஜய் அதற்கு உடனே மீனா ஐயோ இல்ல விஜய் எனக்கு அந்த நேரத்தில் நான் மிகவும் பிசியாக இருந்தேன் இல்லையென்றால் உங்களது திரைப்படத்தில் நடிக்க மாட்டேனா என்று மீனா விஜய் இடம் கூறியதாக இந்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

meena and vijay
meena and vijay

மேலும் விஜய் உடன் இணைந்து நடிக்க மீனாவிற்கு வாய்ப்பு கிடைத்த ஒரு சில திரைப்படங்களை நழுவ விட்டுவிட்டார் விஜய் உடன் மீனா பிரியமுடன் படத்தில் நடித்திருக்க வேண்டியதாம் அதே போல் பிரண்ட்ஷிப் திரைப்படத்திலும் தேவயானி கதாபாத்திரத்தில் மீனாதான் முதலில் நடிக்க வேண்டுமாம் அப்பொழுதும் இவருக்கு கால் ஷீட் தர முடியாததால் விஜயுடன் இணைந்து நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.

Leave a Comment