இளையதளபதி விஜய் தனது அடுத்த திரைப்படத்தை எந்த இயக்குனருடன் கைகோர்க்க போகிறார் தெரியுமா.? இணையத்தில் கசிந்த புதிய தகவல் இதோ.?

இளைய தளபதி விஜய் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட் இயக்குனர் நெல்சன் இயக்கும் இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் மிகவும் அட்டகாசமாக நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து முடிந்து தற்பொழுது வெளிநாட்டில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. தளபதி விஜய்க்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் அமைந்து கொண்டே போகிறது குறிப்பாகக் கூற வேண்டுமென்றால் தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக பல கோடி சம்பளம் பேச பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

மேலும் பீஸ்ட் திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த திரைப்படமாக இருக்கும் என பலரும் கூறி வந்த நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த பொழுதே தெரிந்துவிட்டது இந்த திரைப்படம் முழுவதும் ஆக்ஷன் கலந்த திரைப்படமாக தான் இருக்கும் என்பது.

இதனைத்தொடர்ந்து தளபதி விஜய் தனது 66வது திரைப்படத்தை யார் எந்த இயக்குனருடன் கைகோர்க்கிறார் என பலரும் கேட்டு வந்த நிலையில் ஒரு தகவல் கசிந்துள்ளது அதில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் அடுத்ததாக நடிக்கப்போகிறார் என தகவல் வைரலாகி வருகிறது. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக இருக்கிறதாம்.

vijay
vijay

மேலும் இந்த திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகலாம் என தகவல் கிடைத்துள்ளது.இயக்குனர் வம்சி உடன் தளபதி விஜய் கைகோர்த்தால் படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுப்பது மட்டுமல்லாமல் பலரும் இந்த திரைப்படத்தை மிக ஆவலாக எதிர்பார்கிறார்கள்.

Leave a Comment