சாலையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு தினமும் உணவு வழங்கும் விஷால் எதற்காக தெரியுமா.! வைரலாகும் புகைப்படங்கள்.!

0

கடந்த வருடம் ஆரம்பித்து தற்பொழுதுவரை மக்கள் மற்றும் சினிமா பிரபலங்களை துரத்திக்கொண்டே இருக்கும் ஒரு விஷயம் என்றால் அது கொரோனா வைரஸ் தான் இந்த கொரோனா வைரஸ் கடந்த 2020ஆம் ஆண்டு ஆரம்பித்து தற்போது வரை மக்கள்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரையும் தாக்கி வருகிறது அதில் ஒரு சிலர் மறைந்து விடுகிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

அதிலும் குறிப்பாக தற்போது இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருவதால் மக்கள்கள் தனது தினசரி வேலையை செய்யாமல் இருக்கிறார்கள் ஒருசிலர் வசதியானவர்களாக இருக்கும் பட்சத்தில் பலரும் தங்களது அன்றாட வாழ்வில் உணவை தேடிக் கொள்வதற்காக வேலைக்கு சென்றாக வேண்டும் என்பது நமக்குத் தெரிந்தது தான்.

ஆனால் தமிழக அரசு மே 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை ஊரடங்கு அறிவித்ததால் மக்களால் என்ன செய்வது என திகைத்து நிற்கிறார்கள் இந்நிலையில் மக்கள்களுக்கு உதவி செய்யும் வகையில் சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் நிறைய உதவிகளை செய்து வருகிறார்கள்.

அதேபோல் நடிகர் விஷாலும் தனது பங்கிற்காக இவர் சென்னையில் சாலை ஓரம் தங்கி இருக்கும் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு உணவு உடன் சேர்த்து குடிநீரையும் வழங்கி வருகிறாராம்.

vishal5
vishal5

அதுமட்டுமல்லாமல் இவர் செய்யும் உதவி மக்களால் மறக்க முடியாது என்றுதான் கூற வேண்டும் மேலும் இவரது மனிதநேயத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் பாராட்டி வருவது மட்டுமல்லாமல் இந்த லாக்டவுன் காலத்தில் உணவே இல்லாமல் தவித்து வரும் கால்நடைகளுக்கும் தனது அறக்கட்டளை மூலம் இவர் உணவு வழங்கி வருகிறார்.

vishal 7
vishal 7

இதனையடுத்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் விஷாலை பாராட்டி வருவது மட்டுமல்லாமல் நாங்களும் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டு வரும் மக்களுக்கு உதவி செய்ய போவதாக கூறி வருகிறார்கள்.