சினிமா உலகில் முன்னணி நடிகைகள் பலரும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையை கவனிப்பது உண்டு ஒரு சிலரோ திருமணம் செய்து கொண்ட பிறகும் சினிமா ஆசையினால் நடிக்க வருவது வழக்கம் இதனால் அவர்கள் பல பிரச்சினையை சந்திக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
சமீபகாலமாக இளம் நடிகைகள் குறுகிய காலத்திலேயே திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை என்ஜாய் செய்தாலும் ஒரு குறிப்பிட்ட வருடங்கள் கழித்து விவாகரத்து என்ற பெயரில் இருவரும் பிரிந்து விடுகின்றனர் ஏன் சமீபத்தில் கூட நடிகை சமந்தா, நாகசைதன்யா இருவரும் பிரிந்துவிட்டனர் நான்கு வருடங்களாக சிறப்பாக வாழ்ந்த இவர்கள் கருத்து வேறு பாடு காரணமாக பிரிந்தனர.
இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால் இதையெல்லாம் நன்கு கணித்து கொண்டு தற்போது சினிமாவுலகில் ஓடி கொண்டிருப்பவர் நடிகை திரிஷா இவர் இது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கும் கல்யாண ஆசை ஒரு கட்டத்தில் வந்தது. ஆம் பிரபல தொழிலதிபர் வருண் மணியன் என்பவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார் திரிஷா.
ஆனால் நிச்சயதார்த்தம் வரை சென்று பின் திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் பிரிந்து விட்டனர். நிச்சயதார்த்தத்தை மிக பிரம்மாண்டமாக நடத்திய திரிஷா அதன் பிறகு ஏன் எழுதினார் என்பது பலருக்கும் புரியாமல் இருந்துவந்தது ஆனால் தற்பொழுது அவர் கல்யாணத்தை நிறுத்தியதற்கான தகவல் கிடைத்துள்ளது
. நடிகை திரிஷா தரப்பிலிருந்து வெளிவரும் தகவல் என்னவென்றால் திருமணத்திற்கு பிறகும் திரிஷா கண்டிப்பாக சினிமாவில் நடிக்க விரும்பினார் ஆனால் மாப்பிள்ளை வீட்டிலிருந்து பச்சைக்கொடி காட்டாததால் அவர் இந்த கல்யாணத்தை நிறுத்தி விட்டார். சினிமாவை விட்டு என்னால் வரமுடியாது என ஒத்த காலில் நின்று விட்டாராம் த்ரிஷா.