வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன். இந்த திரைப்படம் வெளியான போது விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் வென்றது தற்போது தனுஷின் அசுரன் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
முக்கிய காரணம் இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்த “நித்திஷ் வீரா” என்பவர் கொரோனா பாதிக்கப்பட்டு இன்று அதிகாலை முடியாமல் உயிரிழந்தார். இதனை தனுஷ் ரசிகர்கள் அனைவரும் அசுரன் என்ற #டேக் ஒன்றை நிறுவி அதை தற்போது இணையதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்த நித்திஷ் வீரா பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து சிறப்பாக வலம் வந்தார் என்று கூறவேண்டும்.
இவர் தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை, அசுரன் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் அதுபோல ரஜினி நடிப்பில் வெளியான காலா மற்றும் வெண்ணிலா கபடி குழு போன்ற படங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கடைசியாக விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் இத்திரைப்படம் வெகு விரைவில் வெளியாக உள்ளது.இந்த நிலையில் நித்திஷ் வீரா திடீர் மறைவு தற்பொழுது ரசிகர்களையும் தமிழ் திரையுலகினரை மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.