நடிகர் அப்பாஸ் சினிமாவுக்கு டாட்டா காட்டியது எதனால் தெரியுமா.? மனதில் இருந்த வலியை முதன் முதலாக இறக்கி வைத்த சாக்லெட் பாய்..!

0

தமிழ் சினிமா உலகில் இரண்டாம் கட்ட கதாநாயகனாக நடித்து பெண் ரசிகைகளை அதிகம் கவர்ந்தவர் நடிகர் அப்பாஸ்.

இவர் தமிழ் சினிமாவில் பல திரைப் படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு கிடைத்தது என்னமோ இரண்டாம்கட்ட கதாபாத்திரம் என்பதால் இவரால் சினிமா உலகில் நிரந்தர இடம் கிடைக்காமல் போனது.

இருப்பினும் ஒரு கட்டத்தில் இவருக்கு சோலோ ஹீரோவாக ஏற்று நடித்தார்  அத்தகைய படங்கள் சொல்லிக் கொள்ளும்படி வெற்றியை பெற்று தரவில்லை.

தமிழ் சினிமாவில் தான் இவருக்கு இப்படி என்றார் பிறமொழி பக்கங்களிலும் இவருக்கு இரண்டாம் கட்ட கதாபாத்திரங்களே கிடைத்ததால் மனமுடைந்து போன அப்பாஸ் சிறிது காலம் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார் மீண்டும் நான் அவன் இல்லை என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்து  ரசிகர்களுக்கு  விருந்து படைத்தார்.

அதன் பிறகு எந்த ஒரு படங்களிலும் நடிக்காமல் போனதால் சினிமா கைவிட்டது அதை புரிந்துக் கொண்டு சினிமாவை விட்டும் வெளியேறினார்.

நடிகர் அப்பாஸ் அதன்பிறகு விளம்பரங்களில் நடிக்க தொடங்கினார் அதிலும் நல்ல வரவேற்பு கிடைக்காததால் தனது குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆகினார்.

அவ்வப்போது இவரது புகைப்படங்கள் வெளிவந்த வண்ணம் இருந்த நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் அவரை பேட்டி எடுக்க தொடங்கினர்.

சமிபத்தில் அப்பாஸ் சினிமாவை விட்டு வெளியே வந்தற்க்கான காரணத்தை சொல்லியுள்ளார் எனக்கு ஏத்த படியான கதை அம்சம் கிடைக்காததால் வெளியேறினேன் மேலும் நாட்கள் போகப்போக நடிப்பதும் போர் அடத்து விட்டது என கூறினார்.

தற்போது தனது குடும்பத்துடன் நல்லபடியாக வாழ்ந்து வருவதாகவும் கூறினார்.