சூப்பர் ஸ்டார் ரஜினி “முதல்வன்” திரைப்படத்தை எதற்காக கழட்டி விட்டார் தெரியுமா.? இதோ வெளிவரும் உண்மையான காரணம்..

சினிமா உலகில் கதைகளம் சிறப்பாக இருந்தால் கூட மிகப் பெரிய பட்ஜெட் தொகையை வைத்து படம்  எடுக்க இயக்குனர்கள் சற்று நடுங்குவார்கள் ஆனால் சங்கர் கதை அம்சம் சிறப்பாக அமைந்து விட்டால் எவ்வளவு கோடி கொடுத்தாலும் அந்த அளவுக்கு படத்தை சிறப்பாக எடுத்து முடியும் சிறப்பும்சம் ஷங்கர்.

அந்தவகையில் ஜென்டில்மேன் படத்தில் தொடங்கி ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான 2. 0 திரைப்படம் வரை மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் தான் ஒவ்வொரு திரைப்படமும் படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்தாலும் அதையும் தாண்டி மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டையை நடத்துவதால் இந்திய அளவில் மிகப் பெரிய இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்று சிறப்பாக பயணித்து வருகிறார்.

1999ஆம் ஆண்டு அர்ஜுனை வைத்து முதல்வர் என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்து இந்த திரைப்படம் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு சிறப்பாக ஓடியது இந்த திரைப்படத்தில் முதன் முதலில் அர்ஜுனுக்கு பதிலாக நடிகர் ரஜினிகாந்தை தேர்வு செய்திருந்தார்.

அத்தகைய காலகட்டத்தில் ரஜினி சினிமாவில் இருந்தாலும் அவ்வப்போது அரசியலிலும் சைலண்டாக இருந்து வந்தார் அப்போது ஒரு முன்னணி கட்சிக்கு பக்கபலமாக ரஜினி இருந்தால் அப்பொழுது தேர்தலின்போது அந்த கட்சி ஜெயித்து ஆட்சியைப் பிடித்தது.

இப்பொழுது இந்த கதையை தேர்ந்தெடுத்து நடித்தால் சரிவராது என்று கூறி மறுத்துவிட்டாராம் ரஜினி.

Leave a Comment