பல கோடி கொடுத்து புதிய வீட்டை வாங்கிய சோனு சூட்.? எதற்காக தெரியுமா.? கேட்டால் நீங்களே ஷாக் ஆவீர்கள்.! வைரல் நியூஸ்.

soonu-sood
soonu-sood

படத்தில் ஹீரோ, வில்லனாக நடிப்பவர்கள் எப்படிப்பட்ட மனிதர்கள் என்பதை ஒரு கட்டத்தில் புரியவைத்து விடும். மக்களும் அதை உணர்ந்து கொள்வார்கள் அந்த வகையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் வில்லனாக நடிக்கும் சோனு சூட்.

படங்களையும் தாண்டி நிஜத்திலும் ஒரு வில்லனாக  தான் பார்க்கிறோம் ஏனென்றால் அவரது நடிப்பு அந்த அளவிற்கு முரட்டுத்தனமாக இருக்கும். ஆனால் கொரோனா  காலகட்டம் நடிகர் சோனு சூட் எப்படிப்பட்ட மனிதர் என்பதை உலகிற்கும், மக்களுக்கும் எடுத்துரைத்துள்ளது.

கொரோனா தொற்றல் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களை தனது சொந்தக் காசு கொடுத்து விமானத்தின் மூலமாகவும், பேருந்து மூலமாகவும் பல ஏழை மக்களை தன் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார் மேலும் உணவின்றி தவித்த மக்களுக்கு தன்னால் முடிந்த உணவுகளையும், காசுகளையும் கொடுத்து அவர்களை திருப்தி படுத்தினார் இதனால் மக்கள் வரை கொரோனா காலகட்டத்தில் கடவுளாக பார்த்தனர்.

மேலும் இவரது வீடு தேடி மக்களும் உதவிகளை கேட்க ஒருவராக அழைத்து அவர்களுக்கு உதவிகளை செய்தார். இந்த நிலையில் தெலுங்கு சினிமா பக்கத்தில் சோனுசூட்டிற்கு அதிக வாய்ப்புகள் கிடைத்து உள்ளது இதனால் அவரும் தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளார்.

இருப்பினும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன இதற்காக தற்போது ஹைதராபாத்தில் புதிய வீடு ஒன்றை பல கோடி கொடுத்து வாங்கியுள்ளார்.