திருமணம் ஆனாலும் வாய்ப்பு குறைய குறைய அதையும் குறைத்துகொள்ளும் சமந்தா.! இதலாம் கொஞ்சம் ஓவர்

தமிழில் பானாகாத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் சமந்தா இவர் அந்த திரைப்படத்தைத் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே ஒரு இடத்தை நிரந்தரமாக தமிழ் சினிமாவில் பிடித்து விட்டார்.

மேலும் இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் விக்னேஷ் சிவனின் காதலியான நயன்தாராவும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள் இவர்களுடன் இணைந்து சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் சமந்தா அடுத்ததாக சகுந்தலம் என்ற திரைப் படத்திலும் நடிக்கவுள்ளார் இந்தத் திரைப்படம் புராண கதையை கொண்டு வித்தியாசமான முறையில் உருவாகா உள்ளதாம் . மேலும் சகுந்தலம் படத்தினை இயக்குனர் குணசேகர் தான் இயக்குகிறாராம்.

இந்த திரைப்படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் சகுந்தலை திரைப்படத்தில் துஷ்யந்தன் கதாபாத்திரத்தில் இளம் நடிகரான தேவ் மோகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து சமந்தா இந்த  திரைப்படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்க உள்ளார் என ஒரு தகவல் இணையதளத்தில் கசிந்துள்ளது ஆம் சமந்தா பொதுவாகவே ஒரு திரைப்படத்திற்கு 3கோடி வாங்குவாராம் இந்நிலையில் இந்த திரைப்படத்திற்காக சமந்தா 2கோடி50லட்சம் தான் சம்பளம் வாங்குகிறார் என ஒரு தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

samantha
samantha

ஏன் சமந்தா இந்த திரைப்படத்திற்காக குறைவாக சம்பளம் வாங்குகிறார் என்று கேட்டால் சமந்தா புராண கதையை கொண்டதால் இந்தத் திரைப்படத்தில் குறைவாக சம்பளம் வாங்குவதாக கூறுகிறார்கள்.

Leave a Comment