அண்ணாத்த திரைப்படத்தை முடித்துவிட்டு இந்த நாட்டிற்கு செல்ல போகும் ரஜினி எதற்காக தெரியுமா.!

0

சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு கௌரவமாக தமிழ் சினிமா உலகில் வலம் வருபவர் ரஜினி இவர் தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்தா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து மீனா, குஷ்பு,நயன்தாரா,கீர்த்தி சுரேஷ் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் அண்ணாத்தா படப்பிடிப்பு ஒரு சில காரணங்கள் குறித்து ஒத்தி வைக்கப் பட்டிருந்தாலும் தற்போது இன்னும் சில நாட்களில் முடிய உள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

மேலும் இந்த அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நிறைய பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது இதனை அடுத்து ரஜினி இந்த திரைப்படத்தை முடித்து விட்டு எங்கே செல்ல போகிறார் என ஒரு தகவல் கிடைத்துள்ளது.

ஆம் அதில் ரஜினி படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய பின்பு ரஜினி ஜூனில் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளாராம் மேலும் அண்ணாத்த படத்தின் டப்பிங் பணி சென்னையில் நடைபெற உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

rajini
rajini

இந்த தகவலை அறிந்த ரஜினி ரசிகர்கள் பலரும் ரஜினிக்கு எந்த ஒரு ஆபத்தும் வரக்கூடாது என இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருவது மட்டுமல்லாமல் இன்னும் நிறைய திரைப்படங்களில் ரஜினி நடிக்க வேண்டும் என பல ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.