கமலின் படப்பிடிப்பு தளத்தில் கலந்துகொண்ட ரஜினி எதற்காக தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்.!

பல ஆண்டுகளாக வெள்ளித்திரையில் நடித்து வரும் நடிகர்களாக திகழ்ந்து  வருபவர்கள் ரஜினி மற்றும் கமல் இவர்கள் இருவரின் திரைப்படங்கள் எப்போதெல்லாம் திரையரங்குகளில் வெளியாகிறதோ அப்போதெல்லாம் இவரது ரசிகர்கள் திரையரங்குகளை அலற விட்டு விடுவார்கள் என்பது நமக்கு தெரிந்தது தான். அதேபோல் வசூல் ரீதியாகவும் இவர்களது திரைப்படங்கள் அதிகம் வசூல் செய்து சாதனை படைத்து விடும்.

என்னதான் திரைப்படங்களில் நடிப்பதில் போட்டி போட்டு இருவரும் நடித்து வந்தாலும் உண்மையாகவே இவர்கள் 2 பேரும் நல்ல நண்பர்களாக தான் தற்போது வரை பழகி வருகிறார்கள் மேலும் ரஜினி நடிப்பில் தற்போது அண்ணாத்த என்ற திரைப்படம் முடிகிற நிலையில் இருக்கிறது.

அதேபோல் கமல் நடிப்பிலும் விக்ரம் மற்றும் இந்தியன் 2 படப்பிடிப்பு கூடிய சீக்கிரம் நடக்க போவதாக சமீபகாலமாகவே தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.இந்நிலையில் கமல் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது ரஜினி அங்கு சென்று அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்து உள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ஆனால் கமல் எந்த திரைப்படத்தில் நடிக்கும் பொழுது எடுத்த புகைப்படம் என்பது தெரியவில்லை ஆனால் இது இருவரின் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருவது மட்டுமல்லாமல் பலரும் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் எதற்காக ரஜினி கமலின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் என்பது தெரியவில்லை என சமூக வலைதள பக்கங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

rajini8
rajini8

இதனை அடுத்து ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படத்தில் மீனா,குஷ்பு,நயன்தாரா,கீர்த்தி சுரேஷ் போன்ற ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பரிச்சயமான நடிகைகள் நடித்து வருவதால் ரஜினி ரசிகர்கள் இந்த திரைப்படம்எப்போது வெளியாகும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment