வெற்றிமாறன் : தான் இயக்கிய படங்களை ஒரு பொழுதுமே பார்க்க மாட்டாராம் – ஏன் தெரியுமா.? அவரே கூறிய சுவாரசிய தகவல்..

தமிழ் சினிமாவில் தோல்வியை காணாத இயக்குனர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இதுவரை உண்மை மற்றும் நாவல்களை மையமாக வைத்து பல படங்களை இயக்கிய வெற்றி கண்டுள்ளார் அந்த வரிசையில் இவர் முதலில் பொல்லாதவன் படத்தை இயக்கினார்.

அதன் பிறகு  ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் போன்ற படங்களை.. கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார் இப்பொழுது கூட விடுதலை என்னும் படத்தை இயக்கி உள்ளார் இந்த படம் நீளமாக இருப்பதன் காரணமாக இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்.

அதன் முதல் பாகம் வெகு விரைவிலேயே வெளிவர இருக்கிறது இந்த படத்தில் விஜய் சேதுபதி, சூரி போன்றவர்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் முழுக்க முழுக்க காடு மலை சார்ந்த பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது இந்த படத்தின் கதை போராட்டக்காரர்களுக்கும், போலீசும் இடையே நடக்கும் பிரச்சனையை எடுத்துரைத்துள்ளது என கூறப்படுகிறது.

அதனால் விடுதலை படத்தை பெரிய அளவில்  எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. அவர் கூறியது என்னவென்றால் நான் ஒரு படத்தை எடுத்தால் அந்த படத்தை பார்க்கவே மாட்டேன் ஏனென்றால் அந்த படத்தில் இதை தப்பு செய்திருக்கிறோம்..

இந்த காட்சியை கூடுதலாக வைத்திருக்கலாம் என நமக்கு  தோன்றிவிடும் அதனால் ஒரு படத்தை முடித்து விட்டால் நான் அந்த படத்தை பார்க்க மாட்டேன் அடுத்த படத்திற்கான வேலைகளை செய்ய ஆரம்பித்து விடுவேன் எனக் கூறினார். மேலும் அவர் சொன்னது  நான் பாடல்களை அதிகம் கேட்க மாட்டேன் என வெளிப்படையாக கூறுகிறார் இந்த செய்திய தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment