மறைந்த நடிகர் விவேக் உடலை பார்க்க ஏன் அஜித்,விஜய் வரவில்லை தெரியுமா.? இது தான் காரணமா..

விவேக்கின் மரணத்தை அறிந்த சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உடனடியாக அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஓடிவந்தனர் ஆனால் ஒரு சிலர் நேரில் வரவில்லை என்றாலும் சமூக வலைதளப் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பல்வேறு டாப் நடிகர்களுடன் நடித்து அவர்களின் படங்களுக்கு வெற்றிக்கு துணையாக இருந்தவர் நடிகர் விவேக் அதிலும் குறிப்பாக அஜித், விஜய் போன்ற ஜாம்பவான்கள் உடன் சிறப்பாக பணியாற்றிய அவருடன் நெருக்கமாகவும் காணப்பட்டவர் விவேக்.

ஆனால் இந்த இருவருமே விவேக்கின் இறுதி சடங்கிற்கு வரவில்லை.  தளபதி விஜய் தற்போது தனது 65வது திரைப்படத்திற்காக ஜார்ஜியா நாட்டிற்கு சென்றார் அவரால் உடனடியாக இங்கே வர முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனால் அஜித் வலிமை படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னையில் தான் இருக்கிறார் ஏன் வந்து பார்க்கவில்லை என பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

மேலும் விவேக் -க்கு மிகவும் பிடித்த நடிகர் அஜித் அவரே வந்து பார்க்கவில்லை என்றால் என்ன என்று தல ரசிகர் ஒரு கட்டத்தில் வேதனை அடைந்தனர்.

அஜித்துடன்  பல்வேறு ஹிட் படங்களில் விவேக் இருந்திருப்பார் அதுபோல ஒவ்வொரு மேடையிலும் அஜித்தை பற்றி புகழ்ந்து பேசிக் கொண்டுதான் இருப்பார். அது போல அஜித் சினிமா உலகில் நம்பக்கூடிய நபர்களில் ஒருவர் விவேக்கை பார்த்தார்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

அஜித் அங்கு வந்து பார்க்கவில்லையே தவிர அவரது குடும்பத்தினரை தல அஜித் போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது மேலும் அஜித் வந்தால் அந்த இடம் மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கும் அதனால் அங்கு ஏதேனும் தர்ம சங்கடமான விஷயங்கள் நடந்து விட்டால் அது நன்றாக இருக்காது என்பதற்காக அஜித் வரவில்லை என்று கூறுகின்றனர்.

Leave a Comment