வை ராஜா வை படத்தில் தனுஷ் வரும் ரோல்ஸ் ராய்ஸ் கார் யாருடையது தெரியுமா.! அட இவருகிட்டையும் இந்த காரு இருக்கா.. இத்தனை நாள் நமக்கு தெரியாம போச்சே.

0

திரை உலகில் அதிகம் காசு சம்பாதிக்கும் பிரபலங்கள் கூட மிகப்பெரிய ஒரு தொகை உள்ள காரை வாங்குவது கஷ்டமாக இருக்கிறது காரணம் அந்த காருக்கு என்று ஒரு தகுதியும் தராதரமும் இருக்கிறதாக கார் சம்பந்தப்பட்ட ஒரு சிலர் கூறுகின்றனர் அந்த வகையில் பல கோடிகளை சம்பாதித்து இருந்தாலும் பிரபல நடிகர், நடிகைகள் ராய்ஸ் காரை வாங்க இன்றளவும் ஆசைப்பட்டு உள்ளனர்.

ஒரு சில குறிப்பிட்ட நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் கையில் மட்டுமே இந்த கார் இருக்கிறது. அந்தவகையில் தமிழில் நடிகர் விஜய், இயக்குனர் ஷங்கர் இவர்களிடம்  மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் கார் இருக்கிறது மற்றபடி அமிதாப் பச்சன், சஞ்சய் தத் போன்ற ஒரு சிலரிடம் மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு இருக்கிறது.

இந்த காரின் ஆரம்ப விலை  5 கோடி என்பதால் அந்த காருகென்று ஒரு தனி மதிப்பு இருக்கிறது மேலும் பெரிய நட்சத்திர பட்டாளத்துக்கு மட்டுமே இந்த காரை விற்பது அந்த கம்பியை இன்னுமொரு சிறப்பம்சம்.

இதை வாங்க தற்பொழுது பல நடிகர் நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர் அந்த வகையில் ஹிந்தியில் பிரபல நடிகையான மல்லிகா ஷெராவத் கூட சமீபத்தில் எனது நீண்ட நாள் ஆசை என்னவென்றால் ரோல்ஸ் ராய்ஸ் காரை எப்படியாவது வாங்க வேண்டும் என்பதுதான் என கூறினார்.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் வை ராஜா வை படத்தில் கடைசியில் கொக்கி குமாராக வரும் தனுஷ் ரோல்ஸ் ராய்ஸ் காரில் வருவார் அந்த கார் யாருடையது என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது அதாவது அந்த காருக்கு உண்மையான சொந்தக்காரர் வேறு யாரும் அல்ல நடிகர் தனுஷ்தான். ரோல்ஸ் ராய்ஸ் வைத்து இருப்போர் லிஸ்ட்டில் நடிகர் தனுஷும் இணைந்து உள்ளார்.