சுந்தர் சி யின் “அரண்மனை 4” ல் ஹீரோவாக நடிக்கப்போவது இவரா.? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்

0
aranmanai-4
aranmanai-4

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலம் என்றால் அது சுந்தர் சி. முதலில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தாலும் ஒரு கட்டத்தில் தன்னை நடிகராகவும் வெளிகாட்டிக்கொண்டார். தொடர்ந்து இவர் இயக்குனராகவும், ஹீரோவாகவும் வெற்றி கண்டு வருகிறார். அதன் காரணமாக சுந்தர் சி யின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

சுந்தர் சி. இவர் கடந்த சில வருடங்களாக பேய் சம்பந்தமான படங்களை எடுத்து வருகிறார். முதலில் அரண்மனை என்னும் படத்தை 2016 ஆம் ஆண்டு எடுத்தார்.  படம் சிறப்பாக இருந்த காரணத்தினால் நல்ல வரவேற்பை பெற்றது. அன்றிலிருந்து இயக்குனர் சுந்தர் சி அதன் அடுத்த அடுத்த பாகங்களை எடுத்து வருகிறார்.

இதுவரை மூன்று பாகங்கள் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அரண்மனை நான்காவது பாகத்தை அவர் எடுக்க இருக்கிறார்.இந்த தடவை ஹீரோவாக யாரை நடிக்க வைக்கப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வந்த நிலையில் தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.

அந்த பிரபலம் வேறு யாரும் அல்ல ஹீரோ, வில்லனாக தமிழ் சினிமாவில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி தான் அரண்மனை 4 – ல் ஹீரோவாக நடிக்க போகிறாராம். இயக்குனர் சுந்தர் சி மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை சந்தித்து முழு கதையையும் கூறி உள்ளாராம்.

அவருக்கு அது ஓகே தானாம். வெகு விரைவிலேயே  அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என சொல்லப்படுகிறது. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை அரண்மனை 4 – ல் வித்தியாசமாக பார்க்க ரொம்ப ஆவலாக இருப்பதாக கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.