தென்னாபிரிக்கா உடனான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா விளையாடாமல் போனால் கேப்டன் பொறுப்பு யாருக்கு போகும் தெரியுமா.? வெளிவந்த சுவாரஸ்ய தகவல்.

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்ட ரோஹித் சர்மா நியூசிலாந்துடனான போட்டிகளில் சிறப்பாக ஆட்டத்தையும் கேப்டன் பொறுப்பையும் செய்து இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தார்.

அதைத் தொடர்ந்து இந்திய அணி சவுத் ஆப்பிரிக்கா முதலில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.  அதன்பின் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாட இருக்கிறது. வழக்கம் போல டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக கோலி செயல்பட மீதி இருக்கின்ற ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் ரோகித் சர்மா செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்தது.

தென்னாபிரிக்காவுடனான போட்டிகளில் விளையாடிய இந்திய அணி ரெடியாக மும்பையில் தீவிர பயிற்சியை செய்து கொண்டிருக்கும்பொழுது ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டு அதன் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் போனார்.

இப்போ ரோஹித் சர்மா பெங்களூருவில் தங்கி பயிற்சி மற்றும் சிகிச்சை ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறார் காயம் இன்னும் ஒரு வாரத்தில் குணம் அடையும் பட்சத்தில் ஒருநாள் தொடரில் கேப்டனாகவும் மீண்டும் பொறுப்பேற்ற அணியை வழிநடத்துவார் ஆனால் காயம் குணமடைய வில்லை என்றால் ரோஹித் சர்மா ஒருநாள் தொடரை தவிர விடுவதோடு மட்டுமல்லாமல் ரோகித் சர்மாவுக்கு பதிலாக புதிய கேப்டனாக வேறு ஒருவர் செயல்படுவார்.

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக கே எல் ராகுல் அந்த பொறுப்பை எடுக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது ஏனென்றால் தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் போட்டிகளில் துணை கேப்டனாக கேஎல் ராகுல் தான் நியமிக்கப்பட்டுள்ளார் ரோகித் சர்மா இல்லாத பட்சத்தில் கேஎல் ராகுல் இந்திய அணியின் கேப்டனாக தற்காலிகமாக செயல்படுவார் என கூறப்படுகிறது.

 

Leave a Comment