நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இப்பொழுது திகழ்கிறார் என்றால் ஆரம்ப காலகட்டத்தில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் படங்களாக மாறியதே காரணம். இவர் ஆரம்பத்தில் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் மக்களுக்கு பிடித்த திரைப்படமாக இருந்ததே..
இந்த படத்தில் காதல், காமெடி, செண்டிமென்ட் என அனைத்தும் நிறைந்த படமாக அனைத்து தரப்பட்ட மக்களையும் வெகுவாக கவர்ந்து விடுகிறது. மேலும் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் பட்டாளத்தை அதிகம் இழுத்து கொடுத்தது இந்த திரைப்படம் தான். இந்த படத்தைத் தொடர்ந்து தான் அவருக்கு தமிழ் சினிமாவில் அதிக பட வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரை படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஸ்ரீதிவ்யா, சத்யராஜ், சூரி, பிந்துமாதவி மற்றும் பல நட்சத்திர நடிகர் நடிகைகள் நடித்து அசத்தி இருந்தனர். இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் இருந்து ஒரு சூப்பர் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் முதன் முதலில் சிவகார்த்திகேயன் பதிலாக வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க தான் முதலில் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. அந்த நடிகர் வேறு யாரும் அல்ல நடிகர் ஜீவா தானாம்.
அதேபோல சிவகார்த்திகேயனுக்கு துணை நடிகராக நடித்தார் சூரி பதிலாக முதலில் நடிகை இருந்தது நடிகர் சந்தானம் என கூறப்படுகிறது சொல்லப்போனால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் முதலில் ஜீவா மற்றும் சந்தானம் தான் நடிகை இருந்தனராம்.