“விருமன்” திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக முதன் முதலில் நடிக்க இருந்த மூன்று நடிகை யார் யார் தெரியுமா.? அப்புறம்தான் ஷங்கர் மகள்.

0
viruman
viruman

சினிமாவுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் சிறந்த இயக்குனர்கள் உடன் கதையை கேட்டு படங்களில் நடிக்கின்றனர் அவர்கள் காம்பினேஷன் சிறப்பாக அமைந்து விட்டால் மீண்டும் மீண்டும் இணைந்து பணியாற்றுவது வழக்கம் அந்த வகையில் நடிகர் கார்த்தி இயக்குனர் முத்தையா உடனே ஏற்கனவே ஒருமுறை கைகோர்த்து கொம்பன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அந்த திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் ஒரு முறை இணைந்துள்ளனர் ஆம் இந்த முறை விருமன் என்ற திரைப்படத்தை கிராமத்து கதையை மையமாக வைத்து எடுத்து வருகின்றனர் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார் இவர் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கும் சங்கரின் இளைய மகள் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படத்திலேயே நடிகர் கார்த்தியுடன் அதிதி ஷங்கர் நடித்துள்ளதால் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறாராம்.

இப்படி இருக்கின்ற நிலையில் விருமன் திரைப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது மூன்று டாப் நடிகைகள் என கூறப்படுகிறது விரும்பும் படத்தை இயக்கும் முத்தையா முதலில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக மூன்று டாப் நடிகைகளில் யாரேனும் ஒருவரை புக் செய்து விடலாம் என்று பார்த்தாராம்.

அந்த வகையில் நடிகை ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ் மற்றும் சாய்பல்லவி ஆகிய மூவரில் ஒருவரை பெட்டியைத் தூக்க முயற்சித்தார் ஆனால் மூவரும் கால்ஷீட் பிரச்சினைகள் காரணமாக இந்த படத்தில் படிக்க முடியாமல் போனது. அதனை எடுத்து பின் அதிதி சங்கர் இந்த படத்தில் நடிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.