தங்க மீன்கள் திரைபடத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா..? அட இவர் நடிச்சிருந்தா கண்டிப்பா படம் வேற லெவல் தான்..!

தமிழ் சினிமாவில் ராம் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் தங்க மீன்கள். இவ்வாறு இந்த திரைப்படத்தை தானே இயக்கி தானே நடித்துள்ளார். இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது தந்தை-மகள் பாசத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

பொதுவாக இயக்குனர் ராம் இயக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருப்பது மட்டுமல்லாமல் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படமாக அமையும். அந்தவகையில் திரைப்படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்கள்  கூர்ந்து கவனிக்கும் வகையில் இருக்கும்.

அந்தவகையில் இந்த திரைப்படத்தில் பனி மூட்டத்தில் எடுக்கப்பட்ட காட்சியானது ரசிகர்களிடம் பெரும் அளவிற்கு பேசப்பட்டன இத்திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜாதான் இசை அமைத்துள்ளார். ஆனால் இந்த திரைப்படத்தில் முதலில் வேறு ஒரு நடிகர் நடிக்க இருந்தாராம்.

ஆனால் அவருக்கு கால்ஷீட் பிரச்சனையின் காரணமாக இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். அவர் வேறு யாரும் கிடையாது பிரபல நடிகர் கருணாஸ் தான். பொதுவாக பல்வேறு இயக்குனர்களும் கருணாசை வைத்து திரைப்படம் இயக்கி வெற்றி கண்டுள்ளார்கள்.

அதே போல தான் இயக்குனர் ராமும் கருணாசை வைத்து இந்த திரைப்படத்தை இயக்கலாம் என முடிவு செய்தாராம். ஆனால் அப்போது கருணாஸ் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்து பிஸியாக இருந்ததன் காரணமாக கால்ஷீட் கிடைக்காமல் போய்விட்டது.

பின்னர் நாமும் கருணாஸ் போல தான் இருக்கிறோம் என  தானே இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார். இவ்வாறு விஷயம் தெரிந்தவுடன் ரசிகர்கள் இந்த திரைப்படத்தில் கருணாஸ் நடித்திருந்தால் வேற லெவலில் இருந்திருக்கும் என கூறியுள்ளார்கள்.

karunas-1

Leave a Comment