தல அஜித் நடித்த வரலாறு திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.! அவர் தான் தற்பொழுது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம்.!

தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு நிறைய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்து தற்போது மிகப் பெரிய நடிகனாக தமிழ் சினிமாவில் வலம் வரும் நடிகர் தான் தல அஜித் இவர் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் நடிக்கும் பொழுது ரசிகர்கள் பெரிய வரவேற்பு தரவில்லை என்றாலும் தனது விடாமுயற்சியினால் எப்படியோ ரசிகர்களை தனது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார்.

ஒரு கட்டத்தில் இவரால் சரியான திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுக்க முடியாமல் தடுமாறினாலும் இவர் நடித்த அட்டகாசம்,வரலாறு,தீனா அமர்க்களம் போன்ற பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துவிட்டது.

குறிப்பாக இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் தான் வரலாறு இந்த திரைப்படத்தில் அஜித்தின் நடிப்பை பார்த்துவிட்டு இவரது ரசிகர்கள் அந்த அளவிற்கு அலப்பறை செய்தார்கள் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான் மேலும் இத்திரைப்படத்தைப் பற்றி சூப்பரான தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

ஆம் தல அஜித் நடித்த வரலாறு திரைப்படத்தில் இவரது கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் ரஜினிகாந்த் தான் நடிக்க வேண்டுமாம் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் ரஜினிக்காக தான் இந்த கதையை எழுதினாராம் அதேபோல் இந்த கதையை ரஜினியிடம் கூறிய பொழுது ரஜினி ஓகே சொன்னதாகவும் பின்பு இந்த கதையை பற்றி எந்த ஒரு பேச்சு வார்த்தை இல்லாமல் கே.எஸ் ரவிக்குமார் மற்றும் ரஜினி ஆகிய இருவருமே படங்களை இயக்குவது படங்களில் நடிப்பது என பிஸியாக இருந்துள்ளார்கள்.

rajini
rajini

பின்பு ஒரு வழியாக இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் அந்த திரைப்படத்தில் தல அஜித்தை நடிக்க வைத்துள்ளார் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் வெளியான பொழுது இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் அஜித்தை பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment