கமலின் மருதநாயகம் திரைப்படத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.?வீடியோ உள்ளே.!

வெள்ளித்திரையில் கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்ற பழமொழிக்கு ஏற்ப நடிப்புத் திறமையை மட்டும் அல்லாமல் பாடகர்,இயக்குனர்,தயாரிப்பாளர் என பல திறமைகளைக் கொண்டு வலம் வந்தவர் தான் உலக நாயகன் கமல்ஹாசன்.

இவர் பல திரைப்படங்களை இயக்கிய பல திரைப்படங்களை தயாரித்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து தனது முகத்தை ரசிகர்களுக்கு பதிய வைத்தார் அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த நிறைய திரைப்படங்களுக்கு இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வந்தார்கள்.

அதிலும் குறிப்பாக கமல் இயக்கி தயாரித்த பல திரைப்படங்கள் திரையரங்குகளில் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கமல் தயாரிப்பில் உருவான திரைப்படம் தான் மருதநாயகம் இந்த திரைப்படம் கமல் தயாரிக்கப் போகிறார் என ரசிகர்கள் கேட்டவுடன் நாளுக்கு நாள் இந்த திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகி கொண்டே போனது மருதநாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க கமல் திட்டமிட்டிருந்தார்.

இந்த நிகழ்வில் கூட பிரித்தானிய மகாராணியாரும் கலந்து கொண்டிருந்தார்கள் அதுமட்டுமல்லாமல் இசைஞானி இளையராஜாவும் இதற்கு இசை அமைக்க முடிவு எடுத்திருந்தார் ஆனால் பணம் பிரச்சனையால் இந்த திரைப்படம் கமல்ஹாசனுக்கு கைவிடப்பட்டது.

ஆனால் இந்த படத்தை எப்படியாவது கமல் தயாரிக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து பார்த்தார் அந்த முயற்சிகள் எதுவும் கமலுக்கு ஒத்துப் போகவில்லை.

இந்நிலையில் மருதநாயகம் திரைப்படத்தில் கமல் கேட்டும் பிரபல நடிகர் மறுத்துள்ளதாக அவரே கூறியுள்ளார் ஆம் யார் அந்த பிரபல நடிகர் என்று கேட்டால் நெப்போலியன் தான் கமல்ஹாசனின் மருதநாயகம் திரைப்படத்தில் கொடூரமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டாராம்.

ஆனால் அப்போது நெப்போலியனுக்கு நிறைய திரைப்படங்களில் கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்து விட்டது இதனால் கமல்ஹாசனிடம் சார் நான் இப்பதான் கதாநாயகனாக திரைப்படங்களில் நடித்து வருகிறேன் திடீரென்று இப்படி கேட்டால் என்னை நம்பி இருக்கும் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் என்னை தப்பா நினைப்பாங்க வியாபார ரீதியாக பல பிரச்சனை வரும் என நெப்போலியன் கூறியுள்ளார்.

நெப்போலியன் கூறும் பொழுது எடுத்த வீடியோ காணொளி ஆனது தற்போது கமல் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் ஒரு சில ஆண்டுகள் கழித்து கமல் இயக்கிய விருமாண்டி திரைப்படத்தில் நெப்போலியன் ஒரு நல்ல கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோ காணொளியை பார்த்த ரசிகர்கள் பலரும் நெப்போலியனுக்கு அப்பொழுது ஒரு சில நெருக்கடி இருந்ததால் தான் கமல் படத்தில் நடிக்க மறுத்தார் என கூறி வருகிறார்கள்.

Leave a Comment