நேர்கொண்ட பார்வை தெலுங்கு ரீமேக்கில் வக்கீலாக மிரட்டியது யார் தெரியுமா.? பட்டைய கிளப்பிவிட்டாரே..!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக நடித்து வருபவர் தல அஜித்.  இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் விரைவில் திரைக்கு வரும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

ஆனால் ரசிகர்கள் அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள்  என்று யாரைப் பார்த்தாலும் வலிமை அப்டேட் கொடுங்கள் என்று போராடி வருகிறார்கள். இதனை அறிந்த தல அஜித் ரசிகர்களிடம் சற்று பொறுமையாக இருங்கள் என்று கூறியுள்ளார்.

எனவே ரசிகர்களும் தற்போது தான் அமைதி காத்து வருகிறார்கள். இந்நிலையில் தல அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்தத் திரைப்படம் பெண்களை மையமாக வைத்து நல்ல கருத்தை சமூகத்திற்கு உணர்த்துவதால் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த படமாக திகழ்கிறது.

 இந்த படம் ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளிவந்த பிங்க திரைப்படத்தின் ரீமேக் தான் நேர்கொண்ட பார்வை. இந்நிலையில் இத்திரைப்படம் தெலுங்கில் வக்கீல்சாப் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

 இத்திரைப்படத்தில் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பவன் கல்யாண் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிவேதா தாமஸ் மற்றும் அஞ்சலி போன்ற முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் வக்கிங்சாப் திரைப்படத்தின் டீசர் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதோ அந்த டீசர்.