ரஜினி பக்கத்தில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா.? இப்போ மிகப்பெரிய ஒரு celebrity..

0
rajini
rajini

தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோவாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்து வருவதால் இவரது மார்க்கெட்டு குறையாமல் உச்சத்திலேயே இருக்கிறது. அதற்கு ஏற்றார் போல சம்பளத்தையும் வாங்கி வருகிறார்.

ரஜினி இப்பொழுது நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படம் அவருக்கு 169 திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயிலர் படம் முழுக்க முழுக்க ஜெயில் சம்பந்தப்பட்ட காட்சிகளை அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அதனால் இந்த படத்தில் ஆக்சன் மற்றும் சென்டிமென்ட் சீன்கள் அதிகம் இடம்பெறும் என தெரிய வருகிறது.

ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார்  ரஜினி உடன் கைகோர்த்து கன்னட டாப் ஹீரோ சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.  இதனால் இந்த படம் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக மாறுமென பலரும் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் 2002 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் பாபா. இந்த படத்தை பிரபல இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தில் நடித்ததையும் தாண்டி   தயாரித்தார் அதுமட்டுமல்லாமல் திரைக்கதை எழுதியும் வடிவமைத்து இருந்தார்,

இந்த படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடினாலும் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றதது. இந்த படத்தில் ஒரு பாடலில் ரஜினியுடன் பல குழந்தைகள் இருப்பார்கள் அதில் ஒருவராக அனிருத் இருப்பார். இந்த காட்சியின் புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு படும் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் ரஜினியின் பாபா திரைப்படத்தில் சின்னதாக வேடம் போட்டிருக்கும் அனிருத்..