தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாக வலம் வருபவர் அஜித் குமார். இவர் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது அதனைத் தொடர்ந்து தற்போது அஜித் 61 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்தத் திரைப்படத்தையும் வினோத் அவர்கள் தான் இயக்க இருக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்தது.
பொதுவாக அஜித்தின் பழைய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வருவது வழக்கம் அந்த வகையில் தற்போது அஜீத்தின் பழைய பழைய புகைபடம் ஒன்று இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது அந்த புகைப்படத்தில் இருப்பது யாரென்று விசாரித்ததில் இந்த புகைப்படத்தில் இருப்பது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்த சென்ராயன் என தெரியவந்துள்ளது.
சென்ராயன் தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், சிலம்பாட்டம் மூடர்கூடம் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்த சென்ராயன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலம் அடைந்தார்.

இந்தநிலையில் சென்ட்ராயன் அஜீத்துடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படம் பல ஆண்டுகளுக்கு முன்பு எடுத்ததாக தெரிகிறது மேலும் இந்த புகைப்படத்தில் சென்ராயன் மிகவும் சிறியவராக இருக்கிறார்.
இதோ அந்த புகைப்படம்.