தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி பின் படிப்படியாக தனது திறமையை வளர்த்துக்கொண்டு தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு உச்ச நட்சத்திரமாக மாதிரி இருப்பவர் ராகவா லாரன்ஸ் ஆரம்பத்தில் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து ஹீரோவாக நடித்தாலும் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் கிடைக்காததால் இவரே படங்களை இயக்கி தயாரித்து நடிக்க ஆரம்பித்தார்.
அந்த வகையில் முனி படம் நல்ல வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதை அடுத்தடுத்த பாகங்களாக அந்தவகையில் காஞ்சனா சீரியஸா இவர் திறம்பட கையாண்டு வெற்றியை குவித்ததால் தற்போது இவருக்கு இந்திய அளவில் தற்போது வாய்ப்புகள் குவிந்து இருக்கின்றன ஏன் சமீபத்தில்கூட ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து லட்சுமி பாம் என்ற திரைப்படத்தை எடுத்து இருந்தார்.
தற்போதுகூட ராகவாலாரன்ஸ் பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார். இப்படிக்கு இருக்கின்ற நிலையில் இன்று ராகவா லாரன்ஸ் பிறந்த நாளை முன்னிட்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கும் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ஒரு புதிய படம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை டிரைடென்ட் ரவிச்சந்திரன் தயாரிக்கவுள்ளார்.
ராகவா லாரன்ஸ் இந்த திரைப்படத்தில் இதுவரை நடித்திராத ஒரு புதிய கெட்டப்பில் நடிக்க இருக்கிறாராம் ஆம் யாரும் எதிர்பாராத சிறப்பு கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அவரது தம்பி எல்வின் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படம் ராகவா லாரன்ஸின் பிறந்த நாள் அன்று வெளியாக உள்ளது.
இந்த படம் அதிரடி ஆக்சன் கலந்த காமெடி மற்றும் மனதை தொடும் எமோஷன் என அனைத்தும் இருக்கும் படமாக கேஎஸ் ரவிக்குமார் உருவாக்கி உள்ளார் என கூறப்படுகிறது. ராகவா லாரன்ஸும் அவரது தம்பியும் முதல்முறையாக இந்தப் படத்தில் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.