பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு பிரியங்கா யார் யாரை சந்தித்துள்ளார் தெரியுமா.? அதுவும் எங்கு தெரியுமா.?

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன்புதான் நிறைவுபெற்றது. மேலும் இந்த சீசனில் வழக்கத்துக்கு மாறாக போட்டியாளர்கள் அதிகமாகவே கலந்து கொண்டனர். இந்த சீசனின் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களும் வைல்டு கார்டு என்ட்ரியாக 3 போட்டியாளர்களும் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த சீசனில் பைனல்ஸ்க்கு ஐந்து போட்டியாளர்கள் தேர்வாகினர். அதில் முதலாவதாக டிக்கெட் டு பினாலே டாஸ்கில் வெற்றிபெற்று அமீர் தேர்வாகியுள்ளார் அடுத்தபடியான டாஸ்கில் நிரூப் வெற்றி பெற்று இரண்டாவது பைனலிஸ்ட் ஆக தேர்வு ஆகியுள்ளார். பின்பு மக்களின் வாக்குகளின் படி ராஜு, பிரியங்கா, பாவணி போன்ற 3 பைனலிஸ்ட்களும் தேர்வாகியுள்ளனர்.

இதில் சென்ற வாரம் நடைபெற்ற கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் ராஜு முதலிடத்தைப் பெற்று பிக்பாஸ் ட்ராபியை வென்று மேலும் ரூபாய் 50 லட்சம் பரிசுத் தொகையையும் பெற்றுள்ளார். இவரைத் தொடர்ந்து 2-வது இடத்தை பிரியங்கா பிடித்துள்ளார் மற்றும் அடுத்தடுத்த இடங்களில் பாவணி, அமீர், நிரூப் போன்றவர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் பைனல்ஸ் நிகழ்ச்சி முடிந்து பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் வெளியேறிய நிலையில் மற்ற பிக்பாஸ் பிரபலங்களை சந்தித்து புகைப்படங்களை எடுத்து இணைய தளத்தில் பதிவிட்டு வந்த வண்ணம் உள்ளனர். அதில் பிக்பாஸ் வீட்டில் பிரியங்கா, நிரூப், அபிஷேக் மூவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு இவர்கள் மூவரும் ஒரு ஹோட்டலில் சந்தித்துள்ளனர்.

அப்போது அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது. மேலும் அதில் அபிஷேக் உடன் மற்றொருவரும் உள்ளனர் ஆனால் அவர் அபிஷேக்கின் உறவினரா யார் என தெரியவில்லை மேலும் அவருக்கு பிரியங்கா கேக் ஊட்டுவது போன்று அந்த புகைப்படத்தில் உள்ளது. இதோ அந்த புகைப்படம்.

priyanka
priyanka

Leave a Comment