80 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும், காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் எம்ஜி குமார். இவர் இயக்குனர் பாலா இயக்கியுள்ள பெரும்பாலான படங்களில் நடித்திருப்பார்.
இவர் நடிகரைவிடவும் காமெடியில் தான் பின்னி பெடல் எடுத்து இருப்பார். செந்தில், கவுண்டமணி, வடிவேலு இவர்களைப் போலவே எம்ஜி குமாரும் ஒருவர். எம்ஜி குமாரின் மனைவி 80 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் இந்த தகவல் பெரும்பாலானோருக்கு தெரிய வாய்ப்பில்லை.
அந்தவகையில் எம் ஜி குமார் நடித்திருந்த அவன் இவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதோடு இந்த திரைப்படம் இவரின் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவ்வாறு இவர் சினிமாவில் பன்முகத் தன்மைகளை கொண்டவராக விளங்குகிறார். இவர் பல்லவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பல்லவி வேறுயாருமில்லை ரஜினிகாந்த் நடித்த வேலைக்காரன் திரைப்படத்தில் குணச்சித்திர நடிகையாக நடித்து இருந்தார். அதோடு பரத் நடிப்பில் வெளிவந்த வெயில் திரைப்படத்திலும் நடித்து பிரபலம் அடைந்தார். இவர் மும்பையைச் சேர்ந்தவர் ஆவார்.

இந்நிலையில் தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். பல்லவி தான் எம் ஜி குமாரின் மனைவி என்பது பலருக்கு தெரியாது.