தல -யின் வீரம் படத்தில் நடித்த குட்டி குழந்தை யார் தெரியுமா?

2014 ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்த திரைப்படம் வீரம். இந்த திரைப்படம் அஜித்திற்கு ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுதந்தது என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் இந்த திரைப்படத்தில் தமன்னா, விதார்த், பாலா,  முனிஷ், சுஹைல் சந்தோக், சந்தானம், நாசர், ரமேஷ்கண்ணா, தம்பி ராமையா,  மயில்சாமி, வித்யுலேகா ராமன், சுசா குமார், அபிநயா, மனோ சித்ரா, மயில்சாமி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

மேலும் இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் கயல்விழி என்கின்ற கதாபாத்திரத்தில் ஒரு சின்ன குழந்தை நடித்திருந்தது. அந்தக் குழந்தையின் உண்மையான பெயர் யுவினா. இந்த குழந்தை 2008ம் ஆண்டு மும்பையில் பிறந்தது இவரின் தந்தை ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

யுவினாவின் தந்தைக்கு தனது குழந்தை சினிமாவில் நடிக்க வேண்டுமென்று ஆசையாம். அதனைத் தொடர்ந்து வீரம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் அவர் நடிக்க ஒப்புக் கொண்டாராம். அந்த குழந்தையும் நடிப்பில் பின்னி எடுத்தது. குழந்தை யுவனா இதுக்கு முன்னால் 2013 ஆம் ஆண்டு உறவுக்கு கைகடுப்போம் என்ற சீரியலில் நடித்து கொண்டிருந்தது.

பின்னர் இதனை தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்ததால் சென்னையில் வந்து செட்டில் ஆகிவிட்டனர். அதனைத் தொடர்ந்து வீரம், மஞ்சப்பை, கத்தி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பல படங்களில் குழந்தை நடித்த வந்தது. ஸ்ட்ராபெர்ரி என்ற திரைப்படத்தின் மூலம் இவருக்கு பல ரசிகர்கள் குவிந்தனர்.

குழந்தை யுவினா தமிழ் மட்டுமல்லாது பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமல்லாமல் கன்னட மொழியில் மம்மி என்கின்ற திரைப்படத்தில் தற்போது நடித்துக் கொண்டு இருக்கிறார்.

Leave a Comment