ரஜினி சினிமா உலகில் வெற்றிக்கொடி நாட்ட முக்கிய பங்கு வகித்தவர் யார் தெரியுமா.? வெளியான சூப்பர் தகவல்.

rajini
rajini

சினிமா உலகில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் ஒவ்வொரு ஹீரோவும் ஒரு கட்டத்தில் அந்த மொழியையும் தாண்டி பிற மொழி பக்கங்களிலும் வேற லெவலில் ரீச் ஆவார்கள் அந்த வகையில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து 40 வருடங்களாக நடித்து வந்த ரஜினி தமிழ் தாண்டி இந்திய அளவில் ஒரு அடையாளமாகவே மாறிவிட்டார் அந்த அளவிற்கு தற்போது ரஜினியின் பெயர் பட்டி தொட்டி எங்கும் பரவி உள்ளது. இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த படம் உருவாகியுள்ளது.

இந்த திரைப்படத்தை கிராமத்து கதையில் சிறுத்தை சிவா எடுத்துள்ளார் இந்த திரைப்படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் எடுத்துள்ளது வருகின்ற தீபாவளிக்கு இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதற்கு முன்பாக இந்த படத்தைப் பற்றி அவ்வப்போது சில அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று டெல்லியில் 67 வது தேசிய விருதுகள் கொடுக்கும் விழாவில் கலந்துகொண்டு அவருக்கு தாதா சாகேப் பால்கே விருதை ரஜினிக்கு வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து தனது மகள் புதிதாக ஒரு app ஒன்றை தொடங்கியுள்ளார் அதையும் தற்போது திறந்து வைத்துள்ளார். ரஜினி இந்த நிலையில் ரஜினி சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்க காரணம் யார் என்பது குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஒரு காலகட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்டக்டராக வேலை செய்து கொண்டிருந்தார் என்பது நம் அனைவருக்கும் தெரியும் ரஜினியுடன் ஒரே பஸ்ஸில் பணி புரிந்த பஸ் டிரைவருக்கு ரஜினிகயின் நண்பருமான ராஜ்பகதூர் தான் ரஜினியை இப்படி சினிமா உலகில் வெற்றி நடைபோட காரணமாக இருந்தாராம். ஒரு நாள் இருவரும் இணைந்து ஒரு நாடகத்தை நடத்தினோம் அதில் ரஜினி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.]

அவருடைய நடிப்பு அனைவரையும் கவர்ந்தது அப்போதுதான் நான் கூறினேன் நீ சென்னை போய் சினிமா கல்லூரியில் சேர்ந்து இணைந்து உன் திறமை உனக்கு தெரியவில்லை ஆனால் நீ சிறப்பாக நடிக்கிறாய் என கூறினார் ஆனால் ரஜினியோ என்னிடம் அவ்வளவு காசு இல்லை எனக் கூறினார். எது வேண்டுமானாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் நீ தைரியமாக இரு என அவரை அனுப்பி வைத்தாராம் ராஜ்பகதூர்.  அவர் இல்லை என்றால் ரஜினி தற்போது சினிமா உலகில் இல்லை.