மாகாபா-வின் மனைவி யார் தெரியுமா.! இவங்க வேற லெவல் தான் போல.

ரேடியோ ஜாக்கியாக பணியாற்றிய வந்து அதன் மூலம் பிரபலமடைந்து தொகுப்பாளராக பணியாற்றிய தொடங்கியவர் தான் மாகாபா ஆனந்த்.  இவர் பொதுவாக ஒரு நிகழ்ச்சியை ஜாலியாக கலகலப்பாக கொண்டு செல்வதால் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வந்த இவர் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கி வந்த அது இது எது நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். இதன் மூலம் பிரபலமடைந்த தொடர்ந்து விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் தற்பொழுது சூப்பர் சிங்கர், மிஸ்டர் அண்ட் மிஸஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பணியாற்றி வருகிறார்.

இவர் சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையிலும் நடித்துள்ளார். வானவராயன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து கடலை,பஞ்சுமிட்டாய், மீசையை முறுக்கு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

இவ்வாறு இவர் சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் சொல்லுமளவிற்கு இவரின் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடையவில்லை. இந்நிலையில் தற்பொழுது மீண்டும் மாகாபா தொடர்ந்து விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவர் கொரோனா காலத்தில் தவித்து வரும் பலருக்கும் உதவி செய்து வருகிறார். இந்நிலையில் மாகாபா ஆனந்த் மனைவியைப் பற்றி சில தகவல் வெளிவந்துள்ளது. மாகாபா ஆனந்த் மனைவி ஆங்கிலோ இந்தியன் பெண் சூஸன் சார்ஜ் ஆவார்.

mapaka anand wife
mapaka anand wife
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment