விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நுழைந்த பிரபல நடிகை.! இவருக்கு குபேரன் உச்சத்தில் இருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது.

தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூல் செய்து விட்டது இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் தான் பீஸ்ட் இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் முடிந்த நிலையில்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மற்றும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்து தற்போது நான்காம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.டெல்லியில் மிக பிரமாண்டமாக ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்பட்டு வரும் புகைப்படங்களை நாம் சமீபத்தில் பார்த்திருக்கலாம் இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

மேலும் விடிவி கணேஷ்,யோகிபாபு மற்றும் செல்வராகவன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள் சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் புதிதாக ஒரு பிரபலம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என ஒரு தகவல் கசிந்துள்ளது ஆம் நடிகை அபர்ணா தாஸ் இந்த திரைப்படத்தில்  இரண்டாவது கதாநாயகியாக நடிக்க இருக்கிறாராம் இதனை உறுதி செய்யும் வகையில் பீஸ்ட் படக்குழு இந்த தகவலை பகிர்ந்து உள்ளார்களாம்.

aparna
aparna

மேலும் இவர் இந்த திரைப்படத்தில் நடித்து வருவதால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள் இந்த திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் என்பதால் பலரும் கொண்டாட்டத்தில் குதித்து வருகிறார்கள்.மேலும் இந்த திரைப்படம் நவம்பர் மாதத்திற்குள் முடிவடைந்து கூடிய சீக்கிரம் வெளியாகும் எனவும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது ஆனால் இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் பலரும் இதனை தான் கூறி வருகிறார்கள்.

Leave a Comment