சிம்பு படத்தை நான் தான் தயாரிப்பேன் என அடம்பிடிக்கும் பிரபல தயாரிப்பாளர் யார் தெரியுமா அவர்.!

சிம்பு தனது உடல் எடையை குறைத்ததில் இருந்தே அவருக்கு படவாய்ப்புகள் ஒன்றின் மேல் ஒன்றாக வந்துகொண்டே இருக்கிறது முதலில் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக நல்ல வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த திரைப்படத்தை அடுத்து சிம்பு தற்போது இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் மாநாடு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ஒரு சில பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் சிம்பு உடல் எடையை குறைத்ததில் இருந்து அவரை வைத்து படம் எடுப்பதற்காக பல தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு சிம்புவை சுத்தி சுத்தி வருகிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் ராசியில்லாத தயாரிப்பாளர் என பலரும் கூறும் தயாரிப்பாளர்தான் லிப்ரா புரொடக்ஷன்ஸ் உரிமையாளரான ரவீந்திரன் சிம்புவை வைத்து தற்போது ஒரு புதிய திரைப்படம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

simbu
simbu

ஆம் இவர் சிம்பு இடையே நல்ல நட்புடன் இருந்து வருகிறாராம் மேலும் சமீபத்தில் சிம்புவை பார்த்த அவர் அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு ஒரு பஞ்ச் டயலாக்கையும் கூறியுள்ளாராம் என்று தகவல் இணைய தளத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது அது மட்டுமல்லாமல் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவருடன் கூட்டணி வைத்தால் படம் நல்லா இருக்குமா என கேட்டு வருகிறார்கள்.

Leave a Comment