தளபதி விஜய்க்கு prank கால் செய்த பிரபல முன்னணி நடிகர் யார் தெரியுமா அது.? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க.!

தமிழ் சினிமா உலகில் ஆரம்ப கால கட்டத்தில் தனது அப்பா இயக்கிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து அதன் பின்பு பல்வேறு இயக்குனர்களுடன் கைகோர்த்து தற்போது தமிழகத்தில் அதிகப்படியான ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கும் நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.

இவரது நடிப்பில் வெளியாகும் எல்லா திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெறுவது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் அதிகம் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் வசூல் மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.

அதைத்தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தளபதி 65 திரைப்படத்தில் இயக்குனர் நெல்சன் உடன் கைகோர்த்துள்ளார் முதல்கட்ட படப்பிடிப்பை ஜார்ஜியா நாட்டில் முடித்து விட்டு சென்னை திரும்பிய விஜய் தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் நடிக்க இருக்கிறார் மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெட்டே நடிக்க பல சினிமா பிரபலங்கள் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

பொதுவாகவே தளபதி விஜயுடன் யார் அன்பாக பேசினாலும் அவர்களை கவனித்துவிட்டு தான் மற்ற வேலைகளை பார்ப்பார் என்பது நமக்கு தெரியும் ஆனால் தமிழ் திரை உலகை சேர்ந்த பல சினிமா பிரபலங்கள் விஜய்க்கு நெருங்கிய நண்பர்களாக தான் இருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக ஒரு சில நடிகர்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள் அந்த வகையில் பார்த்தால் விஜய்யின் நெருங்கிய நண்பராக பழகி வருபவர் ஜீவா விஜய் மற்றும் ஜீவா ஆகிய இருவரும் நண்பன் திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளார்கள் என்பதை நாம் அறிவோம்.

https://youtu.be/1uk0PD0nTaM?t=27

இந்நிலையில் ரேடியோ சேனல் ஒன்றுக்கு தளபதி விஜய் பேட்டி அளிக்க சென்றுள்ளார் அங்கு சென்ற பின் மக்களிடையே பேசும் பொழுது திடீரென்று ஜீவா prank கால் செய்து விஜய்யை கலாய்த்துள்ளார் மேலும் அப்பொழுது அவர்கள் பேசியபோது எடுத்த ஆடியோ தற்பொழுது சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகிறது அதுமட்டுமல்லாமல் இந்த ஆடியோவில் விஜயிடம் ஜீவா சாதாரணமாக மக்கள் பேசுவது போல பேசி கலாய்த்துள்ளார்.-

Leave a Comment

Exit mobile version