கவினுக்கு கல்யாணம் மணப்பெண் யார் தெரியுமா.?

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 இல் அறிமுகமான இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியாவும் சீரியல் நடிகரான கவினும் காதலித்தனர்.

இவரின் காதல் தான் கடந்த சீசனில் ஓவியா ஆரவ்வின் காதலுக்கு பிறகு பெரிய அளவில் பேசப்பட்டது. இவர்களின் காதலை பிடித்த ரசிகர்கள் இவர்களுக்கு கவின்லியா என ஒரு ஆர்மியை தொடங்கினர்.

அதனை தொடர்ந்து இவர்களின் காதலை லாஸ்லியாவின் தந்தை எதிர்த்தார். அதனை பெரிதாக பொருட்படுத்தாமல் மீண்டும் அவரை காதலித்தார் இதை அனைவரும் அறிந்ததே.

ஆனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த பின்பு இவர்கள் காதல் முடிவடைந்தது. பின்னர் அதனைத் தொடர்ந்து தற்போது கவின் ஆடை வடிவமைப்பாளர் காதலிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

 இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பேசப்பட்டு வருகிறது. இதை அறிந்த கவின் லாஸ்லியா  ரசிகர்கள் காதல் அவ்வளவு தானா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Comment

Exit mobile version