STR – ன் 50 வது படத்தை இயக்க போவது யார் தெரியுமா.? சிறப்பான கூட்டணி.!

சினிமா உலகில் தனது இளம் வயதில் இருந்து தற்போது வரை சிறப்பாக ஜொலித்து வரும் நடிகர் சிம்பு அவரது ரசிகர்களுக்காக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். இப்படி சிறப்பாக ஓடிக் கொண்டிருந்த சிம்பு இடையில் சற்று உடல் எடை கூடி படங்களில் அதிகம் கவனம் செலுத்தாமல் இருந்து வந்தார்.

மேலும் உடல் எடையை ஏற்றி அவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெறவில்லை. அதனையடுத்து பிறகு ஜிம் ஒர்க்கவுட் எல்லாம் செய்து உடல் எடையை குறைத்து கம் பேக்  கொடுக்கும் வகையில் ஈஸ்வரன், மாநாடு போன்ற திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

அதில் கடைசியாக சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்தது. இந்த படத்தை தொடர்ந்து சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்ததை..

தொடர்ந்து கூடிய விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து திரைக்கு வர ரெடியாக உள்ளது. இதனையடுத்து நடிகர் சிம்பு கொரோனா குமாரு, பத்துல தல போன்ற திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

simbu
simbu

இந்த நிலையில் நடிகர் சிம்புவின் 50வது திரைப்படம் குறித்து தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. ஆம் சிம்புவின் 50-வது படத்தை இயக்குனர் ராம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் இது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூடிய விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Leave a Comment