பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தீபிகாவுக்கு பதில் யார் நடிக்கப் போகிறார் தெரியுமா.? அட இந்த மெகா ஹிட் சீரியல் நடிகையா.!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் vj தீபிகா இவர் தற்பொழுது இந்த சீரியலில் இருந்து விலகி இருப்பதால் இந்த கதாபாத்திரத்திற்கு வேறு எந்த நடிகையை நடிக்க வைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

ஏனென்றால் இந்த சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் தீபிகாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது அதனால் இந்த நடிப்பிற்கு ஏற்ற நடிகையை தேர்வு செய்வார்கலா பாண்டியன் ஸ்டோர் குழு என ரசிகர்கள் கவலையில் இருக்கிறார்கள்.  பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தீபிக கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் அகிலாவாக நடித்து மிகவும் பிரபலமடைந்த காயத்ரி புவனேஷ் தான்.

இவரின் சொந்த ஊர் மதுரை இவர் சென்னையில் வைஷ்ணவி கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தவர். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே பல சேனல்களில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். மேலும் ஜீ தமிழ், ராஜ் டிவி ஜெயா டிவி என பல டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அதன் பிறகுதான் சின்னத்திரைக்கு என்ட்ரி ஆனார்.

2016ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்ப பட்டு வந்த கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடரில் மஞ்சு என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார். இந்த தொடரில் தனது சொந்தக்குரலில் பேசினார். மேலும் ஜெயா தொலைக்காட்சியில் கில்லாடி ராணி  என்ற ஸ்பெஷல் ஷோவில் தொகுத்து வழங்கினார். அதுமட்டுமில்லாமல் சிவா மனசுல சக்தி என்ற சீரியலிலும் சாவித்திரியாக நடித்தார்.

Gayatri Bhuvanesh
Gayatri Bhuvanesh

மேலும் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்த சரவணன் மீனாட்சி தொடரில் நடித்துள்ளார். இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மிகவும் பிரபலமான கதாபாத்திரமாக இருந்து வரும் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் இதனை பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிரம் பக்கத்தில் இன்று முதல் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் பழைய ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் இருந்து தீபிகா ஏன் மாற்றப்பட்டார் என்ற விவரம் தற்போது தெரிய வந்துள்ளது அவருக்கு அதிகமாக முகப்பரு வருவதால் அவரை உடனடியாக இந்த சீரியலில் இருந்து மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது இது குறித்து அவரே ஒரு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Gayatri Bhuvanesh
Gayatri Bhuvanesh