தளபதி 67-ல் யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா.? இதோ முழு லிஸ்ட்…

0
thalapathy-67
thalapathy-67

விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் யார் யார் என்ற தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டு வருகிறது இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவான மாஸ்டர் திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில் இவர்கள் இருவரும் மறுபடியும் இணைந்து உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் தளபதி 67 அப்டேட்டிற்காக காத்திருக்க இன்னொரு காரணமும் இருக்கிறது.

அதாவது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது இதனை தொடர்ந்து தளபதி 67 திரைப்படம் ரசிகர்களுக்கு ஏற்றவாறு அமையும் என்று எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள் இதன் காரணமாக தான் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட்டிற்காகவும் தளபதி 67 திரைப்படத்திற்காகவும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம் ரசிகர்கள் தளபதி 67 திரைப்படம் குறித்த அப்டேட் வேண்டுமென்று சமூக வலைதளங்களில் கேள்வி கேட்டு வந்தனர் இந்த நிலையில் சமீப காலங்களாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்னும் கொஞ்சம் நாட்களில் தளபதி 67 திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகிவிடும் என்று கூறி வந்தார்.

அதுமட்டுமல்லாமல் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் வெளி வருவதற்கு முன்பு பல தகவல்கள் வெளியாகி கொண்டே இருந்தது. அதில் பல வதந்திகளும் சேர்த்து பரவியது. யாரும் எதிர்பார்க்காத விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் பிப்ரவரி 1, 2, 3, இந்த தேதிக்குள் வெளியாகும் என்று கூறியிருந்தார்.

அந்த வகையில் தற்போது தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் லோகேஷ் கனகராஜ் சொன்ன தேதியில் வெளியாகாமல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கிவிட்டது அதாவது தளபதி 67 திரைப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தற்போது வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் லிஸ்ட் இதோ. சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான். உள்ளிட்டவர்களின் புகைப்படத்துடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தளபதி 67 படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

இதோ தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் முழு லிஸ்ட்.