2022 ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்க துடிக்கும் முதல் 5 வீரர்கள் யார் யார் தெரியுமா.?

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் சீசன் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது அடுத்த ஆண்டும் 15 வது சீசன் நடத்தப்பட இருக்கிறது இந்த ஆண்டில் இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்ட மொத்தம் 10 அணிகள் விளையாட இருக்கிறது.

இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு மீதி வீரர்களை ரிலீஸ் செய்யுமாறு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது இதனை அடுத்து ஒவ்வொரு அணியும் அதுபோன்ற சிறந்த வீரர்களை கொண்டது அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மாவை 16 கோடி கொடுத்து முதலாவதாக தன் வசப்படுத்திக் கொண்டது.

அடுத்ததாக பும்ரா 12 கோடி, சூர்யகுமார் யாதவ் 8, கோடி 6 கோடி கொடுத்து நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொண்டது மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறப்பாக விளையாடி வந்த பாண்டிய பிரதர்ஸ், இஷன் கிஷன், டிரென்ட் போல்ட் போன்றவர்களை தக்கவைக்க முடியாமல் போனது. அடுத்த வருடம்  பிப்ரவரி மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் ஐபிஎல் மெகா ஏலம்  நடத்த இருக்கிறது அதில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் இந்த 5 வீரர்களை எவ்வளவு காசு கொடுத்தாலும் பரவாயில்லை வாங்கியாக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறது.

ஐபிஎல் மற்றும் தனது சொந்த அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் ஆல்ரவுண்டர் ரஷித் கான் இவரை வாங்க அனைத்து IPL அணிகளும் கடும் போட்டி ஓடுகிறது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியும் இவரை கூறி வைத்துள்ளது. இரண்டாவது வீரராக டெல்லி அணிக்கு விளையாட்டி வந்த வேகப்பந்து வீச்சாளரான அவேஷ் கானை வாங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

மூன்றாவது வீரராக KKR அணிக்காக விளையாடி வரும் ராகுல் திரிபாதியை வாங்க மும்பை இந்தியன்ஸ் அணி அதிகம் ஆர்வம் காட்டும் ஏனென்றால் மிடில் ஆடர்களில் விக்கெட்டை அவ்வளவு சீக்கிரத்தில் கொடுக்காமல் சிறப்பாக விளையாடி வருவதால் இவருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நான்காவதாக ஜானி பேர்ஸ்டோ வை வாங்கவும் வாய்ப்பு ஐந்தாவது வீரராக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடி வந்த இஷான் கிஷனை தன் வசப்படுத்திக் கொள்ள மும்பை அதிகம் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது

Leave a Comment