தளபதி 67-ல் இணைந்த முன்னணி பிரபலங்கள் யார் யார் தெரியுமா.? வெளியான தகவலால் உச்சகட்ட உற்சாகத்தில் ரசிகர்கள்…

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய் இவர் தற்போது வம்சி இயக்கி உள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டார் இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய்.

இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாரிசு படம் வெளியான உடனே வெளியிடப்படும் என்று ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார் அந்த வகையில் வாரிசு படம் வெளியான பிறகு தளபதி 67 குறித்து லோகேஷ் கனகராஜ் இடம் கேட்கும் போது இன்னும் பத்து நாட்களில் தளபதி 67 திரைப்படத்தின் அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறியிருந்தார்.

அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தின் அறிவிப்பை எதிர்பார்த்து இன்றுவரையிலும் ரசிகர்கள் ஏக்கமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் அவ்வப்போது தளபதி 67 திரைப்படத்திலிருந்து பல தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது அந்த வகையில் இந்த திரைப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

அந்த வகையில் நடிகர் விஜய் அவர்கள் தளபதி 67 திரைப்படத்தில் ஒரு 50 வயது கேங்ஸ்டர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது மேலும் விஜய் மற்றும் திரிஷாவின் மகளாக பிக் பாஸ் பிரபலம் ஜனனி நடிக்கிறார் என்று ஒரு புதிய தகவல் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.

இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், விஷால், விக்ரம், கமல், பகத் பாசில், சூர்யா, மிஷ்கின், அர்ஜுன் தாஸ், உள்ளிட்டா பல சினிமா பிரபலங்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment