தமிழ் சினிமாவில் 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார் யார் என்று தெரியுமா.?இதோ அந்த பட்டியல்.

0

தமிழ் சினிமா எந்த அளவுக்கு வளர்ந்து வருகிறதோ அதே அளவிற்கு நடிகர்கள் சம்பளம் உயர்ந்து கொண்டுதான் வருகிறது. முக்கிய நடிகர்களான ரஜினி, அஜித், விஜய், இவர்கள் சம்பளம் 100 கோடியைத் தாண்டிவிட்டது அதன்படி இந்த ஆண்டு நிலவரப்படி எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்று காண்போம்

விஜய்

விஜய் பத்து வயதில் வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.அதனைத் தொடர்ந்து இது எங்கள் நீதி, என்ற திரைப்படத்தில்  கூட நடித்துள்ளார்.அதன்பிறகு நாளைய தீர்ப்பு,என்ற திரைப்படத்தில் முதன் முதலில் நடிகராக நடித்தார். இதுவரை விஜய் 65 திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் கடைசியாக நடித்த பீஸ்ட் திரைப்படம் கதையில் கொஞ்சம் சொதப்பி விட்டது ஆனால் இதுவரை ஒரு லட்சத்து 118 கோடி வரை சம்பளம் பெறுகிறார் என்று சமூகவலைத்தள பக்கத்தில் தெரியவந்தது.

vijay
vijay

அஜித்

இவர் மே 1 1971 ஆம் ஆண்டில் பிறந்தார் மேலும் இவர் பிரேம புத்தகம், என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார் அதன் வழியாக அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு  கிடைத்தது அந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்று தரவில்லை அதன் பிறகு ஆசை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.அதன் வழியாக விஸ்வாசம் மற்றும் வலிமை போன்ற திரைப்படங்கள் தமிழகத்தில் சுமார் 100 கோடி  வசூலித்தது இவர் நடிக்கும் 62வது திரைப்படத்திற்கு 105 கோடி வரை சம்பளம் வாங்குவார் என சமுக வலைதளங்களில் கூறப்படுகிறது.

ajith
ajith

ரஜினி

இவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று அழைப்பார்கள் இவர் முதன் முதலில் நடித்த திரைப்படம் அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார் மேலும் அவர் மூன்று முடிச்சு என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார் அதன் பிறகுதான் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வந்தார் மேலும் இவர் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் அந்த திரைப்படத்தில் 105 கோடி சம்பளம் வரை வாங்கினார் அந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்ப்பை பெற்று தரவில்லை அவர் நடிக்கும் 169 வது திரைப்படத்திற்கு 80 கோடி தான் சம்பளம் வாங்க இருக்கிறாராம்.

கமல்ஹாசன்

இவர் நவம்பர் 7 1054 பிறந்தார் இவர் நடித்த முதல் முதலில் களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் இவர் தற்போது ஒரு திரைப்படத்திற்கு 35 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.

சூர்யா

இவர் முதன்முதலில் நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்  அதன்பிறகு காதலே நிம்மதி, பெரியண்ணா, பூவெல்லாம் கேட்டுப்பார், என போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.தற்போது நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் 28 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம்.

surya
surya

இவர்கள் மட்டும் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயன் 25 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார், மற்றும் தனுஷ் 20 கோடி வரை சம்பளம் வாங்குகிறார், விஜய் சேதுபதி ஐந்து முதல் பத்து கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார், நடிகர் விக்ரம் 15 கோடி சம்பளம் வாங்குகிறார்,மற்றும் நடிகர் விஷால் 4 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார், ஆர்யா 4 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார், ஜெயம் ரவி 5 முதல் 8 கோடி வரை சம்பளம் வாங்குகிறார், ஜீவா 4 முதல் 6 கோடி வரை  பிரகாஷ்ராஜ் 3 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார், சந்தானம் 5 கோடி சம்பளம் வாங்குகிறார், சத்யராஜ் 2 கோடி வாங்கி வருகிறார், சித்தார்த் 2 முதல் 4 கோடி சம்பளம் வாங்குகிறார், சிம்பு 7 முதல் 8 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.