மும்பை இந்தியன்ஸ் அணியில் தக்க வைக்கப்பட்டு உள்ள 4 வீரர்கள் யார் யார் தெரியுமா.? வெளியான அறிவிப்பு.

ஐபிஎல் இதுவரை 14 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 15 வது சீசன் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் தொடங்க இருக்கிறது அதற்கு முன்பாக  வீரர்களை ரிலீஸ் செய்து பின் ஏலத்தில் எடுக்க பிசிசிஐ அறிவுறுத்தி உள்ளது. ஒரு அணியின் மொத்தம் நான்கு வீரர்கள் மட்டுமே தக்க வைத்துக்கொள்ள வேண்டும் மீதி வீரர்களை ஏலத்தில் வெளியிட்டு பின் எடுத்துக் கொள்ள அனுமதித்துள்ளது.

இதனையடுத்து அந்த அணி நிர்வாகம் சிறந்த நான்கு வீரர்களை தன்வசப்படுத்தி மீதி வீரர்களை ரீலீஸ் செய்து உள்ளது அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் 11 வீரர்களும் சிறந்த வீரர்கள் அவரை தக்கவைத்துக் கொள்வது என்பது புரியாமல் இருந்து வந்த நிலையில் ஒரு வழியாக முடிவு செய்துவிட்டது.  மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் ரோகித் சர்மாவை முதலில் தக்க வைக்கப் படுகிறார்.

அடுத்ததாக இஷன் கிஷன், பும்ரா, பொல்லார்ட் ஆகியோர்களை தக்க வைத்துக்கொண்டு மீதி வீரர்களை ரிலீஸ் செய்ய இருக்கிறது. முதலில் தக்கவைக்கும் வீரருக்கு 16 கோடியும், இரண்டாவது வீரர் 12 கோடியும், மூன்றாவது வீரர்களும் 8 கோடியும், நான்காவது  வீரருக்கு 6 கோடியும் கொடுக்கப்படும்.

இதன் மூலமாகவே மும்பை இந்தியன்ஸ் 42 கோடி செலவாகும் மீதி இருக்கின்ற தொகையை வைத்து மற்ற வீரர்களை வாங்க வேண்டும். மும்பை இந்தியன்ஸ் அணியை இந்த நான்கு வீரர்கள் தவிர மீதி வீரர்கள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா, போல்ட் ஆகியவர்களை எவ்வளவு காசு கொடுத்தாலும் வாங்க இருக்கிறதாம்.

இந்த தடவை 8 அணிகள் இல்லாமல் இரண்டு நிலைகள் புதிதாக சேர்க்கப்பட்ட ஐபிஎல் மொத்தம் 10 அணிகள் விளையாட இருக்கிறது. இதனால் அடுத்த வருடமும் அதிக போட்டிகளில் அளிப்பதோடு மட்டுமல்லாமல் செம விறுவிறுப்பாக இருக்கும் என தெரியவந்துள்ளது.

Leave a Comment